சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தில் திடீரென தீப்பிடித்த பைக்.. நூலிழையில் தப்பி.. கதறிய இளைஞர்!
சென்னை: சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தில் திடீரென இருசக்கர வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த சென்னை ஆயிரம் விளக்கைச் சேர்ந்த இளைஞர் நூலிழையில் உயிர் தப்பினார். தனது கண் முன்னே பைக் தீப்பிடித்து எரிவதை கண்டு அவர் கதறி துடித்தார்.
சென்னை ஆயிரம் விளக்கைச் சேர்ந்தவர் ஐசக் . இவ 5 வருடங்களுக்கு முன்பு கே.டி.எம் 200 ரக இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். ஒரு வருடங்களுக்கு முன்பு இந்த வண்டியின் இன்ஜீன் பழுதடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஐசக் தனது வாகனத்தை வீட்டிலேயே நிறுத்திவிட்டார்.

கேடிஎம் பைக்
ஒரு வருடத்திற்கு தன் பைக்கை பழுது பார்க்க விரும்பிய ஐசக், அதனை ஷோரும் சென்று கொடுத்துள்ளார். சுமார், ரூ. 60,000 செலவழித்து பைக்கை ரிப்பேர் பார்த்ததாக சொல்லப்படுகிறது. பழுது பார்த்த பிறகு, ஐசக் பைக்கை வீட்டுக்கு கொண்டு சென்றிருக்கிறார். அடுத்த நாளே, பைக் மீண்டும் பழுதாகி உள்ளது.

சர்வீஸ் சென்டர்
இதனால், ஐசக் மீண்டும் பைக்கை பழுது பார்க்க சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கே, ஒன்றும் பிரச்னையில்லை என்று கூறி, பைக்கை சிறிய வேலைகளை பார்த்துவிட்டு கொடுத்து அனுப்பி உள்ளார்கள் சர்வீஸ் சென்டரில் உள்ளவர்கள்.

தீப்பிடித்தது
இதையடுத்து வாகனத்தை எடுத்துக்கொண்டு ஐசக் வந்துள்ளார். அவர் சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தில் வந்த போது திடீரென சறுக்கி கீழே விழுந்தார். விழுந்த வேகத்தில் பைக் தீ பற்றி எரிந்தது. நல்ல வேலையாக ஐசக் நூலிழையில் உயிர் தப்பினார். ஆனால் பைக் கொழுந்து விட்டு எரிந்தது, வெறும் கூடு மட்டுமே மிஞ்சியது.

கோடம்பாக்கம்
தகவல் அறிந்து சென்னை தியாகராய நகர் தீயணைப்புத்துறையினர் வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, கோடம்பாக்கம் போலீஸார் விசாரித்து வருகிறார்கள். கோடம்பாக்கம் மேம்பாலத்தில் திடீரென வாகனம் தீப்பிடித்த காரணத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications