Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

”பைக்”கை பெட்ரூம் ஆக்கிய காதல் ஜோடி.. ரோடுன்னு கூட பார்க்கல.. போலீசார் செய்த சூப்பர் காரியம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இளம் காதல் ஜோடிகள் பைக்கை பெட்ரூம் ஆக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அந்த காதல் ஜோடியினர் மற்ற வாகன ஓட்டிகளை முகம் சுளிக்கும் வகையில் நடந்துகொண்டனர். பட்டப்பகலில் பொதுமக்கள் அதிகமாக கூடும் சாலையில் காதல் ஜோடி நடந்து கொண்டவிதம் பலரை முகம் சுளிக்க வைத்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரவிய நிலையில் அந்த காதல் ஜோடியை கண்டறிந்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இளம் காதல் ஜோடிகள் சிலர் பொது இடங்களில் நடந்து கொள்ளும்விதம் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும் விதமாக அமைந்து இருக்கிறது. பீச், பார்க், தியேட்டர் என எந்த இடமாக இருந்தாலும், சுற்றிலும் ஆள் இருப்பதையே மறந்து வரம்பு மீறிய செயல்களில் சில காதல் ஜோடிகள் ஈடுபடுவது சுற்றி இருப்பவர்களுக்கே தர்மசங்கடத்தை கொடுக்கும் வகையில் அமைந்து விடுகிறது.

bike-turns-bedroom-couple-fined-for-public-romance-by-police

கட்டி அணைத்துக்கொண்டு சென்ற ஜோடி

யாராவது எடுத்து சொன்னாலும் கூட காதில் வாங்கி கொள்ளாமல் சில காதல் ஜோடி எல்லை மீறி செய்யும் நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன. அப்படியான ஒரு சம்பவம் தான் உத்தர பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-

உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் பைக்கில் ஒரு இளைஞர் சென்று கொண்டிருந்தார். பைக்கில் பின் இருக்கையில் யாரும் இல்லாவிட்டாலும் கூட இரண்டு பேர் பயணிப்பது போல இருந்தது. சந்தேகத்தில் கிட்ட போய் பார்த்த வாகன ஓட்டிகளுக்கு அப்போதுதான் உண்மை புரிந்தது. அதாவது, இளைஞர் தனது காதலியை பெட்ரோல் டேங்கில் தன்னை பார்க்க அமரவைத்துக்கொண்டு பைக்கை ஓட்டி சென்றார்.

ஹெல்மெட்டை கையில் பிடித்துக்கொண்டு

அந்த இளம்பெண்ணும் ஹெல்மெட்டை தலையில் மாட்டிக்கொள்ளாமல், கையில் வைத்தபடி இளைஞரை கட்டி அணைத்துக்கொண்டு உட்காந்திருக்கிறார். பட்டப்பகலில் பொதுமக்கள் அதிகமாக கூடும் சாலையில் காதல் ஜோடி நடந்து கொண்ட விதம் கொண்டவிதம் பலரை முகம் சுளிக்க வைத்தது. சுற்றிலும் ஆள் இருக்கிறார்கள் என்பதை எல்லாம் மறந்த அந்த ஜோடி, தங்கள் காதல் விளையாட்டை பைக்கில் வைத்தே விளையாட ஆரம்பித்துள்ளனர்.

சாலையா இல்லை பெட்ரூமா

சாலையா இல்லை பெட்ரூமா என கேள்வி கேட்கும் வகையில் அந்த காதல் ஜோடி நடந்து கொண்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது. இந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் டெல்லி பதிவெண் கொண்ட அந்த பைக்கின் எண்ணை வைத்து விசாரித்த போது, உத்தர பிரதேசத்தில் உள்ள நொய்டா சாலையில் இந்த ஜோடி உல்லாச பயணம் செய்ததை போலீசார் கண்டறிந்தனர்.

ரூ. 2,500 அபராதம் விதித்தனர்

இதையடுத்து, 'நம்பர் பிளேட்'டை கொண்டு அந்த காதல் ஜோடியை பிடித்தனர். அந்த பைக்கை பறிமுதல் செய்ததுடன், ரூ.2,500 அபராதமும் விதிக்கப்பட்டது. உலக அளவில் அதிகம் விபத்துக்கள் நடைபெறும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

இதற்கு போக்குவரத்து விதிகளை உரிய முறையில் பின்பற்றாமல் இருப்பதே முக்கிய காரணமாக சொல்லப்படும் நிலையில் சாலைகளில் இப்படி விதிகளை மீறுவது மட்டும் இல்லமால் முகம் சுளிக்க வகைக்கும் வகையில் ஈடுபடும் செயல்களை ஏற்றுக்கொள்ளவே முடியாது எனவும் இது போன்ற செயல்களில் ஈடுபடும் காதல் ஜோடிகள் மீது வெறும் அபராதம் பைக் பறிமுதல் நடவடிக்கை மட்டும் போதாது எனவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

கடிவாளம் போட வேண்டியது அவசியம்

ஒரு நெட்டிசன் கூறுகையில், அண்மைக்காலமாக இதுபோன்ற செயல்கள் அதிகம் நடப்பதை காண முடிகிறது. சமீபத்தில் பெங்களூரில் கூட இளைஞர் ஒருவர் தனது காதலியுடன் அநாகரீகமாக நடந்து கொண்டபடி பைக்கை ஓட்டிய காட்சிகள் வைரலானது. அவ்வப்போது நடக்கும் இத்தகைய செயல்களுக்கு முற்றிலும் கடிவாளம் போட வேண்டியது அவசியம் எனவும், போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இத்தகைய செயல்களை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+