காசு மேல காசு வந்து கொட்டுது.. கோடீஸ்வர குடும்பங்கள்! டாப் 3-க்குள் வந்த தமிழகம்.. முதலிடம் யார்?
சென்னை: நாட்டில் கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதில் டைமெர்சிடீஸ்-பென்ஸ் ஹூரூன் என்ற நிறுவனம் தற்போது நாட்டிலேயே டாப் 10 கோடீஸ்வர குடும்பங்கள் லிஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது. "இந்திய செல்வ அறிக்கை-2025" என்ற பெயரில் இந்த பட்டியலானது வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழகம் 3ஆம் இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தில் எந்த மாநிலம் என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.
உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. அதேபோல் இந்தியாவில் பெருகும் செல்வந்தர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் பணக்காரர்கள் பட்டியலில் அம்பானி, அதானி, சிவ நாடார் உள்ளிட்டோர் இடம் வகிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் நம்பர் 1 பணக்காரர்
தமிழ்நாட்டில் மிகப்பெரும் பணக்காரராக நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர் தொழில் அதிபர் ஷிவ் நாடார். HCL நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடார், இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப முன்னோடியாக இந்தப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். இவரைத் தொடர்ந்து, நிதி சேவைகள், பொறியியல் மற்றும் உரத் தொழில்கள் எனப் பல துறைகளில் செயல்படும் முருகப்பா குழுமம் உள்ளது.
கிராமப்புற தென்காசியில் இருந்து உலகளாவிய SaaS சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ஜோஹோ நிறுவனத்தின் ஸ்ரீதர் வேம்பு, தமிழ்நாட்டின் பாரம்பரிய மற்றும் புதுமையான செல்வத்திற்குச் சான்றாகிறார். தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், ஜவுளி முதல் நுகர்வோர் பொருட்கள் வரை, இவர்கள் இந்தியாவின் தெற்கு மாநிலத்தின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக விளங்குகின்றனர்.
கோடீஸ்வர குடும்பங்கள் லிஸ்ட்
நாட்டில் ஒரு புறம் பொருளாதார சவால்கள் இருந்தாலும், கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து, புதிய சாதனைகளை படைத்து வருகிறது. இதன்படி நாட்டிலேயே டாப் 10 கோடீஸ்வர குடும்பங்கள் லிஸ்டை மெர்சிடீஸ்-பென்ஸ் ஹூரூன் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. "இந்திய செல்வ அறிக்கை-2025" என்ற பெயரில் இந்த பட்டியலை அந்த நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
நாடு முழுவதும் தற்போது ரூ.8 கோடியே 50 லட்சத்திற்கு மேற்பட்ட சொத்து மதிப்பு கொண்ட குடும்பங்கள் 8 லட்சத்து 71 ஆயிரம் இதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு இது வெறும் 1.59 லட்சம் குடும்பங்களாக இருந்தது. அதாவது 90 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
மகாராஷ்டிரா முதல் இடம்
இந்த கோடீஸ்வர குடும்பங்கள் பட்டியலில் முதல் மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. இந்த மாநிலத்தில் மட்டும் 1.78 லட்சம் கோடீஸ்வர குடும்பங்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக மும்பையில் மட்டும் 1.42 லட்சம் குடும்பங்கள் வசிக்கின்றன. இதனால் மும்பை ''இந்தியாவின் கோடீஸ்வர தலைநகரம்'' என்ற பெயரை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு 3ஆம் இடம்
இந்த பட்டியலில் 2ஆம் இடத்தில் நாட்டின் தலைநகரான டெல்லி இடம் பிடித்து இருக்கிறது. டெல்லியில் மட்டும் 79,800 கோடீஸ்வர குடும்பங்கள் இருக்கின்றன. மூன்றாம் இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழகத்தில் மட்டும் 72,600 குடும்பங்கள் உள்ளன. 4ஆம் இடத்தில் கர்நாடகா உள்ளது. இங்கு 68,800 குடும்பங்கள் உள்ளன.
இந்த பட்டியலில் 5வது இடத்தில் குஜராத் உள்ளது. குஜராத்தில் 68,300 குடும்பங்கள் உள்ளன. 6வது இடத்தில் உத்தரப்பிரதேசம் உள்ளது. இங்கு 57,700 குடும்பங்கள் உள்ளன. 7வது இடத்தில் தெலுங்கானா மாநிலம் (51,700 குடும்பங்கள்), 8வது இடத்தில் மேற்கு வங்கம் (50,400 குடும்பங்கள்), 9வது இடத்தில் ராஜஸ்தான் (33,100 குடும்பங்கள்), 10வது இடத்தில் ஹரியானா (30,500 கோடீஸ்வர குடும்பங்கள்) உள்ளன.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications