உலகையே திரும்பி பார்க்க வைத்த தமிழ் பெண்.. ஆதித்யா L1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி! முழு பயோடேட்டா
சென்னை: சந்திரயானை 3 தொடர்ந்து சூரிய ஆராய்ச்சிக்காக இஸ்ரோ அனுப்பும் ஆதித்யா L1 திட்டத்தின் இயக்குநராக உள்ள தென்காசியை சேர்ந்த விஞ்ஞானி நிகர் ஷாஜி தற்போது டிரெண்டாகி வரும் நிலையில், பள்ளி, கல்லூரி படிப்பிலும் அவர் பல சாதனைகளை படைத்து இருக்கிறார்.
வெற்றிகரமாக நிலாவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 3 திட்டம், சந்திரயான் 1, சந்திரயான் 2 என மூன்று திட்டங்களின் இயக்குநர்களும் தமிழர்கள் நமது மக்கள் பூரித்து வரும் நிலையில் அடுத்து சூரியனை ஆராய்ச்சி செய்ய இஸ்ரோ அனுப்ப உள்ள ஆதித்யா L1 திட்டத்தின் இயக்குநராகவும் தமிழரே செயல்படுகிறார் என்ற தகவல் நமது மக்களை மகிழ்ச்சியடைய வைத்து உள்ளது.

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த நிகர் ஷாஜி என்ற பெண் விஞ்ஞானிதான் இந்த திட்டத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியை சேர்ந்த நிகர் ஷாஜியின் இயற்பெயர் நிகர் சுல்தானா. இவரது தந்தை ஷேக் மீரான். தாய் ஜைத்தூன் பீவி. இவர்களின் 2 வது மகள்தான் நிகர் ஷாஜி.
பள்ளி காலத்திலிருந்தே படிப்பில் கெட்டிக்காரராக இருந்து இருக்கிறார். செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அவர் பயின்று உள்ளார். எப்போதுமே தேர்வுகளில் இவர்தான் முதல் மதிப்பெண்கள் எடுப்பாராம். 1978 - 79 கல்வியாண்டில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 433 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அந்த பள்ளி அளவிலும் கல்வி மாவட்ட அளவிலும் இதுவே அதிக மதிப்பெண்ணாகும்.
அதன் பிறகு, 1980 - 81 கல்வியாண்டில் 12 ஆம் பொதுத்தேர்வில் 1008 மதிப்பெண்கள் பெற்ற நிகர் ஷாஜி பள்ளி அளவில் முதலிடம் பிடித்து இருக்கிறார். உயர்கல்விக்காக நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் இளநிலை பொறியியல் படித்த அவர், அதை தொடர்ந்து உலக புகழ்பெற்ற பிர்லா இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி நிறுவனத்தில் மேற்படிப்பு படித்தார்.
படிப்பை நிறைவு செய்த பின் இஸ்ரோவில் அவருக்கு பணி கிடைத்தது. அமெரிக்காவில் அமைந்து இருக்கும் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் உட்பட பல்வேறு நாடுகளில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு சென்று நிகர் ஷாஜி விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான கூடுதல் அனுபவங்களை பெற்று இருக்கிறார்.
நிகர் ஷாஜியின் கணவர் ஷாஜகான் துபாயில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். நிகர் ஷாஜிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். நெதர்லாந்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார் நிகர் ஷாஜியின் மகன் முஹம்மது தாரிக். அவருடைய மகள் தஸ்னீம் பெங்களூரில் மருத்துவம் படித்து வருகிறார்.
தமிழ்நாட்டில் ஒரு கடைக்கோடி கிராமத்தில் பிறந்து கல்வியால் உயர்ந்து தலை சிறந்த உயர் கல்வி நிறுவனத்தில் சேர்ந்து, இஸ்ரோவில் விஞ்ஞானியாகி, அதன் பல்வேறு திட்டங்களில் பணிபுரிந்து தற்போது இஸ்ரோவின் சூரிய ஆராய்ச்சி செய்யும் மிக முக்கிய திட்டமான ஆதித்யா L1 திட்டத்தின் இயக்குநராக உயர்ந்து தமிழ்நாட்டுக்கும், தென்காசி மண்ணுக்கும் பெருமை சேர்த்து உள்ளார் நிகர் ஷாஜி.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications