விண்ணை முட்டிய வீரவணக்கம்.. ஜெய்ஹிந்த்.. தமிழகத்தின் ரத்தத்தில் ஊறியது தேச பக்தி! நெகிழ்ச்சி வீடியோ
நாளை ஒருநாள் ஊட்டியில் கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: உயிரிழந்த ராணுவ வீரர்களின் வாகனங்களுக்கு, பொதுமக்கள் சல்யூட் அடித்து வீரவணக்கம் செலுத்திய வீடியோ ஒன்று, இணையத்தில் நெகிழ்ச்சியை கூட்டி வருகிறது.
எந்தவித இயற்கை சீற்றங்களுக்கும் உட்பட்டவர்கள் இல்லை நம் ராணுவ வீரர்கள்.. குளிர்பிரதேசம், சதுப்புநிலம், கடல்பிரதேசம், பாலைவன பிரதேசம் எத்தகைய மோசமான சூழ்நிலை வந்தபோதும் நம் தாய்நாட்டை காக்கும் பணியை செய்பவர்கள்..
அதனாலேயே ராணுவத்திற்கும், ராணுவ வீரர்களுக்கும், துணை நிலை ராணுவப்படை வீரர்களுக்கும் நாம் இன்றுவரை நம் மரியாதையை செலுத்தி வருகிறோம்...

தேசபக்தி
ராணுவ வீரர்கள் என்பவர்கள், வெறும் இந்திய அரசு பணியாளர் மட்டுமல்ல, இந்த தேசத்தையே தன் தோளில் சுமக்கும் மாவீரர்கள்.. சகமனிதனுக்கு கிடைக்கக்கூடிய சாதாரண அடிப்படை சந்தோஷங்களை கூட தனக்குள்ளே அழுத்தியும், அமுக்கியும் வைத்து கொண்டு, தன்னை மெழுகாக உருக்கி கொண்டவர்கள்..

கிரிக்கெட்
ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும்போதெல்லாம், நம்மையும் அறியாமல் நம் தேசப்பற்று வெளிப்பட்டு கொண்டுதானிருக்கிறது... அவ்வளவு ஏன், கிரிக்கெட் விளையாட்டின்போதும், மக்களவையின் தேர்தலின்போதும் நாடி நரம்புகளை புடைத்து கொண்டு வெளிப்பட்டு விடுகிறது இந்த தேசபக்திதான்.. நாட்டுப்பற்று என்று வந்துவிட்டால் பிராந்திய உணர்வுக்கு அங்கு இடமில்லை.. ஒருவர் இந்தியராகவே இருந்தாலே போதும், அவருக்கு தேசப்பற்றை சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை.
|
பெண்கள்
ஆக்கப்பூர்வமான தேசபக்தி என்பது நாம் வாழும் இடம், நகரம், மாவட்டம், மாநிலம், இப்படி எங்கு இருக்கிறோமே, அந்த மக்களிடையே சகிப்புத்தன்மையை வளர்ப்பதும், அவர்கள் அனைவரையும் அரவணைத்து செல்வதிலும்தான் அடங்கி உள்ளது.. இதுவே ஜனநாயக தன்மையாகவும் பார்க்கப்படுகிறது. அதிலும், பெண்கள் உட்பட அனைத்து தரப்பிலும் கண்ணியத்துடன் வாழ உதவுவதே தேசபக்தி... மொழி, சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு பரஸ்பர மரியாதையை ஊக்குவிப்பதும் தேச பக்திதான்.. இவை அனைத்தையும் நம் ராணுவ வீரர்களுக்கு இன்றுவரை நாம் அள்ள அள்ள குறையாமல் தந்து கொண்டிருக்கிறோம்.

ஹெலிகாப்டர்
அப்படித்தான் இன்றும் தந்துள்ளோம்.. முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர், குன்னூர் அருகே மலை மீது மோதியதில், அவரும் அவருடைய மனைவி மற்றும் 12 பேர் மரணமடைந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து நாட்டு மக்கள் இன்னமும் மீளவில்லை.. அதிலும் நம் தமிழகத்தில் இப்படி ஒரு விபத்து நடந்துள்ளதை ஜீரணிக்கவே முடியவில்லை.. இந்த வீரர்களின் உடல்கள், டெல்லி கொண்டு செல்லப்பட்டு முழு ராணுவ மரியாதையுடன் நாளை உடல்கள் அடக்கம் செய்யப்படவுள்ளன..

விமானபடை
முன்னதாக, இவர்களின் உடல்களை வேனில் ஏற்றி சூலூர் விமான படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.. அப்போது ஒரு இடத்தில் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.. அது ஒரு குறுகலான சாலை.. சாலையின் இரு பக்கமும் மக்கள் குழுமி உள்ளனர்.. அங்கிருந்த கடைகள், அருகில் இருந்த வீடுகளில் பொதுமக்கள் நிரம்பி வழிகின்றனர்.. ராணுவ வீரர்களின் வாகனங்கள் கொண்டு செல்லப்படுவதால், அதற்கு சல்யூட் வைக்க அனைவரும் கால்கடுக்க காத்து நின்றுள்ளனர்..

பதட்டம்
பிறகு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக வர ஆரம்பிக்கிறது.. மக்கள் கூட்டத்திடம் ஒரு அசாதாரண தோற்றம் தென்படுகிறது.. பலர் பதட்டமடைகிறார்கள்.. பலர் உணர்ச்சிவசப்படுகிறார்கள்.. வாகனங்கள் அருகில் வந்ததும் வீர வணக்கம் என்ற சொல்லை உதிர்க்க ஆரம்பிக்கின்றனர்.. அடுத்த ஒருசில வினாடிகளில் அந்த பகுதி மொத்தமும் வீரவணக்கம் என்ற ஒற்றை சொல் சூழ்ந்து கொண்டு விண்ணை முட்டுகிறது.. வரிசையாக வந்த வாகனங்களுக்கு தாங்கள் கையில் வைத்திருந்த பூக்களை தூவுகிறார்கள்.

சல்யூட்
உணர்ச்சிபெருக்குடன் சல்யூட் அடித்து ஜெய்ஹிந்த் என்று நரம்பு புடைக்க உச்சரிக்கிறார்கள்.. வாகனங்கள் அனைத்தும் அவர்களை கடந்து செல்லும்வரை, ஜெய்ஹிந்த் வார்த்தை அந்த பகுதியில் எதிரொலித்து கொண்டே இருக்கிறது.. இதுதான் நம் தேசபக்தி.. இது யார் சொல்லியும் நமக்கு ஒரு நிமிடத்தில் வந்துவிடாது.. நம் ரத்தத்தில் இயல்பிலேயே ஊறி இருப்பது.. இந்த தேசபக்தியும் ஒற்றுமையும்தான் நம்மை இன்று வரை அன்னிய சக்திகளிடம் இருந்து பிரித்துவிடாமல் காப்பாற்றி கொண்டிருக்கிறது... "திமுக ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா" என்று கேட்பவர்களால், இப்படிப்பட்ட தேசபக்தியை புரிந்து கொள்ள முடியாதுதான்..!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications