பிறப்புச் சான்றிதழில் சிறிய பிழையா? அரசிதழ் விளம்பரம் இல்லாமலே திருத்தம் செய்ய சூப்பர் வழி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு மனிதனின் வாழ்நாளில் மிக முக்கியமான முதல் ஆவணம் பிறப்புச் சான்றிதழ் ஆகும். பள்ளிச் சேர்க்கை, பாஸ்போர்ட், திருமணம் என அனைத்துக்கும் இதுவே அடிப்படையாக அமைகிறது. இதில் பெயர் மாற்றம் அல்லது திருத்தம் செய்வது குறித்துப் பலருக்கும் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. அதற்கான எளிய சட்ட நடைமுறைகளை அங்கு சுருக்கமாக பார்க்கலாம்.

உங்கள் பெயரில் சிறிய எழுத்துப் பிழை (Spelling mistake) மட்டுமே இருந்தால், அதற்கு அரசு அச்சகத்தில் அறிவிப்பு வெளியிட வேண்டிய அவசியமில்லை.

Birth Certificate Name Correction Gazette Notification Tamil Nadu Birth Certificate

ஊராட்சி செயலாளர், விஏஓ என அழைக்கப்படும் கிராம நிர்வாக அலுவலர் அல்லது சுகாதார ஆய்வாளரை அணுகி, உரிய பிரமாணப் பத்திரம் மற்றும் அடையாளச் சான்றுகளைச் சமர்ப்பித்தாலே பிழையைச் சரிசெய்து பெற்றுக்கொள்ளலாம்... ஆனால், பிறப்புச் சான்றிதழில் உள்ள பெயரை முழுமையாக மாற்ற விரும்பினால், தமிழக அரசின் அரசிதழில் (Gazette) பெயர் மாற்ற அறிவிப்பை வெளியிடுவது கட்டாயமாகும்.

யார் யார் விண்ணப்பிக்கலாம்?

18 வயது பூர்த்தியடைந்த நபர்கள் பெயர் மாற்றத்திற்குத் தாங்களே நேரடியாக விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவராக இருந்தால், அவருடைய பெற்றோரோ அல்லது சட்டப்பூர்வ பாதுகாப்பாளரோ மட்டுமே விண்ணப்பத்தில் கையொப்பமிட வேண்டும். அதேசமயம், 60 வயதைக் கடந்தவர்கள் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும்போது, பதிவுபெற்ற டாக்டரிடம் பெற்ற ஆயுள் சான்றிதழை அசலாக இணைத்து சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.

தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை

பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிக்கப் பிரமாணப் பத்திரம், இப்போதைய பிறப்புச் சான்றிதழ் நகல், கல்விச் சான்றிதழ் அல்லது சாதி சான்றிதழ் நகல், குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை, அடையாளச சான்று நகல் மற்றும் சமீபத்தில் எடுக்கப்பட்ட போட்டோ போன்றவை தேவைப்படும்.

முதலில், பெயர் மாற்றத்திற்கான கட்டணமான ரூ.750-ஐ www.karuvoolam.tn.gov.in என்ற வெப்சைட்டிற்கு சென்று, ஆன்லைனிலோ அல்லது வங்கி சலான் மூலமாகவோ செலுத்த வேண்டும்.

அதன்பின், www.stationeryprinting.tn.gov.in என்ற தமிழக அரசு அச்சகத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் படிவத்தைப் பூர்த்தி செய்து, செலுத்துச்சீட்டு மற்றும் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சரிபார்க்கப்பட்ட பிறகு அரசிதழில் பெயர் மாற்றம் பிரசுரமாகும். அரசிதழை நேரில் பெற விரும்புவோர் 5 நாட்களுக்குள் சென்று பெற்றுக்கொள்ளலாம், இல்லாவிட்டால் அது தபால் மூலம் உங்கள் முகவரிக்கு வந்துசேரும்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்?

அரசிதழில் ஒருமுறை பெயர் மாற்றம் செய்த பிறகு, "என்கிற" (Alias) என்ற பெயரையோ அல்லது பழைய பெயரையோ மீண்டும் சேர்க்க முடியாது. அதுமட்டுமல்ல, அரசிதழில் ஏதாவது அச்சுப்பிழை இருந்தால் அதை 6 மாதங்களுக்குள் முறையிட்டு சரிசெய்து கொள்ள வேண்டும்.

அரசிதழ் நகலை பெற்ற பிறகு, அதைச் சான்றாகக் கொண்டு பிறப்புப் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துப் பிறப்புச் சான்றிதழில் புதிய பெயரை பெற்றுக்கொள்ளலாம். 2018 ஜனவரி 1-க்கு பிறகு பதிவான பிறப்புச் சான்றிதழ்களை crstn.org வெப்சைட்டில் எளிதாக டவுன்லோடு செய்யலாம். பிறப்புச் சான்றிதழில் பெயர் மாறிய பிறகே பள்ளிச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் போன்ற பிற முக்கிய ஆவணங்களிலும் திருத்தம் செய்ய இயலும்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+