பிறப்பு சான்றிதழை இனி ஈஸியா பெறலாம்.. அதைவிடுங்க, சென்னை மாநகராட்சி கூட்டத்தில் மேயரின் சர்ப்ரைஸ்?
சென்னை: சென்னை மாநகராட்சியின் கூட்டம் ரிப்பன் மாமன்றக் கூட்டரங்கில் இன்று நடக்கிறது.. இன்று காலை 10 மணியளவில், மேயர் பிரியா தலைமையில் மாமன்றக் கூட்டம் நடைபெற உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் நிர்வாகம் மற்றும் நகர வளர்ச்சி தொடர்பான பல்வேறு முக்கிய முடிவுகள் இன்றைய மாநகராட்சி கூட்டத்தில் எடுக்கப்படும் என தெரிவதால், அதற்கான எதிர்பார்ப்புகள் கூடி வருகின்றன.
தமிழக அரசின் 50 சேவைகளை வாட்ஸ் அப் வழியாக பொதுமக்கள் பயன்படுத்தும் திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நேற்று துவக்கி வைத்திருந்தார்.. இதற்காக சென்னை மாநகராட்சி 94450 61913 என்ற வாட்ஸ்ஆப் எண்ணை அறிமுகம் செய்திருக்கிறது..

பிறப்பு சான்றிதழ் - 50 சேவைகள்
தமிழக அரசுக்கும், மெட்டா நிறுவனத்துக்கும் இடையேயான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, வாட்ஸ் அப் வழியாக அரசு சேவை வழங்கும் திட்டம், நேற்று சென்னை மாநகராட்சியில் தொடங்கி வைக்கப்பட்டது.
சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கும் வசதி, சென்னை குடிநீர் வாரியம் வரி மட்டும் கட்டணம் கட்டும் வசதி, ரேஷன் அட்டையில் பெயர் நீக்கம், சேர்க்கும் வசதி, முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் வசதி, இருப்பிடச் சான்றிதலுக்காக விண்ணப்பித்து சான்றிதழை பெறும் வசதிகள், தொழில் வரி, பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட சேவைகளை 94450 61913 என்ற வாட்ஸ்ஆப் நம்பரில் பெற முடியும்.
இன்று மாமன்ற கூட்டம்
இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில், சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாமன்றக் கூட்டரங்கில், மேயர் ஆர். பிரியா தலைமையில் மாமன்றக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில், மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளின் நிலவும் குடிநீர், சுகாதாரம், தெருவிளக்குகள், பராமரிப்பு பிரச்சினைகளை முன்வைத்து பேசி, அதற்கு தீர்வு கோருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் கவுன்சிலர்கள் விவாதிப்பார்கள்.
அதேபோல, பெருநகர சென்னை மாநகராட்சியின் நிர்வாகம் மற்றும் நகர வளர்ச்சி தொடர்பான பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது... குறிப்பாக, நகரத்தின் உள்கட்டமைப்பு மேம்பாடு, சாலைகள் சீரமைப்பு, மழைநீர் வடிகால் அமைப்புகள், மற்றும் திடக்கழிவு மேலாண்மை தொடர்பான புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து விவாதிக்கப்படலாம்.
விவாதங்கள், ஆலோசனைகள்
மேலும், வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது... பிறகு புதிய நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது.
முன்வைத்து, அதற்குத் தீர்வு காணக் கோருவார்கள்.நகரத்தின் சுற்றுசூழல் பாதுகாப்பு, வாகனப் போக்குவரத்து மேலாண்மை, மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு போன்ற துறைகளில் புதிய கொள்கைகளை உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்படலாம்.
மொத்தத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே நடைபெறும் இந்த மாமன்றக் கூட்டத்தில் காரசார விவாதங்களும் எழலாம் என தெரிகிறது..
சென்னை மாநகராட்சியின் 2026-26 ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம் ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது.. இதில் சென்னை மாநகராட்சியை அழகுப்படுத்த ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், ரூ.42 கோடியில் ரயில்வே மேம்பாலங்கள், மேம்பாலங்களின் கீழ் அழகுப்படுத்தும் பணிகள் நடைபெறும் என்றும் பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications