ஒரு நிமிடத்தில் 194 பிரியாணி! ஸ்விக்கியில் 2025லும் நம்பர் 1 பிரியாணியே.. குறுக்கே வந்த கறிவேப்பிலை
சென்னை: இயந்திரமாகிவிட்ட வாழ்க்கையில், மக்கள் வீட்டில் சமைப்பதைவிட, ஓட்டலில் ஆர்டர் செய்து சாப்பிடுவதே அதிகம் விரும்புகிறார்கள்.. இதன்காரணமாகவே இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவரி சேவைகள் மிக வேகமாக வளர்ந்துவிட்டன.. இதற்கு முன்னணியில் இருக்கும் நிறுவனம் ஸ்விக்கி ஆகும். இந்த ஸ்விக்கி தற்போது மகிழ்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.. அது என்ன?
மக்களின் அபிமானத்தை பெற்ற நிறுவனமான ஸ்விக்கி தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.. அதில், இந்த 2025ம் வருடத்தில், எத்தனை கஸ்டமர்கள், என்னென்ன உணவை அதிகமாக ஆர்டர் செய்திருக்கிறார்கள்? என்பதை லிஸ்ட் போட்டு வெளியிட்டுள்ளது.

ஸ்விக்கி கோழி பிரியாணி
அந்தவகையில், இந்தியர்கள் ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்த லிஸ்ட்டில் பிரியாணி டாப்பில் முதலிடத்தில் உள்ளது.. இதன் சுவாரசியம் என்னவென்றால், பிரியாணி கடந்த 10 வருஷங்களாகவே தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வருகிறது.
ஸ்விக்கி தரவுகளின்படி, 2025ம் ஆண்டில் மட்டுமே 9 கோடியே 30 லட்சம் பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. அதாவது, ஒரு நிமிடத்திற்கு 194 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் ஆர்டர்
ஒரு விநாடிக்கு 4 பிரியாணி என்ற வீதம் ஒரு நிமிடத்தில் 194 பிரியாணி என நடப்பாண்டில் 9 கோடியே 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பிரியாணியை டெலிவரி செய்யப்பட்டுள்ளன.. இதில் சிக்கன் பிரியாணி மட்டும் 5 கோடியே 77 லட்சம் ஆர்டர்கள் பெற்றுள்ளது.
பிரியாணிக்கு அடுத்தபடியாக பர்கர் 2வது இடத்தில் உள்ளது. கடந்த வருடம் 4 கோடியே 42 லட்சம் பர்கர்கள் ஆர்டர் செய்துள்ளனர்.. 3வது இடத்தில் பீட்சா உள்ளது. இதற்கான ஆர்டர்கள் 4 கோடியே 1 லட்சமாக பதிவாகியுள்ளது.
பாரம்பரிய உணவான தோசைக்கும் மக்களின் வரவேற்பு நல்லது. இந்த ஆண்டில் 2 கோடியே 62 லட்சம் தோசைகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
குறுக்கே வந்த கறிவேப்பிலை
இனிப்பு வகைகளில் சாக்லேட் கேக் முதலிடத்திலும் உள்ளது. 70 லட்சம் ஆர்டர்களுடன் இது மிகவும் பிரபலமான இனிப்பாகும். அதனைத் தொடர்ந்து குலோப் ஜாமூன் 45 லட்சம் ஆர்டர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதன் மூலம் மக்களின் இனிப்பு விருப்பங்களையும் தெரிந்துகொள்ள முடிகிறது.
கொச்சியைச் சேர்ந்த ஒருவர் இந்த வருடம் மட்டும் மொத்தம் 368 முறை கறிவேப்பிலை ஆர்டர் செய்திருக்கிறாராம்.. மும்பையை சேர்ந்த ஒரு உணவுப் பிரியர் தினமும் சராசரியாக 9 ஆர்டர்கள் வீதம், மொத்தம் 3,196 ஆர்டர்கள் செய்து அதிகபட்ச ஆர்டர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.. அதேசமயம், புனேவாசி ஒருவர் தனியாக ரூ. 1,73,000 மதிப்பிலான உணவுகளை ஆர்டர் செய்து, மொத்தப்பேரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார்..
மக்கள் தங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்வதற்காக ஆன்லைன் ஆர்டர்களை அதிகரித்து வருகின்றனர்... அதாவது ஆன்லைன் உணவு ஆர்டரிங் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டதை புரிந்துகொள்ள முடிகிறது.
இந்த லிஸ்ட்டை பார்த்தால், இந்தியர்களின் உணவு விருப்பங்கள் என்னென்ன? ஆன்லைன் ஆர்டரிங் எவ்வளவு பரவலாக உள்ளன? உணவுப் பழக்கங்கள் நம் மக்களிடம் எப்படியெல்லாம் மாறிப்போய்விட்டன? மக்களின் பிடித்தமான உணவு என்ன? என்பதையெல்லாம் தெளிவாக தெரிந்து கொள்ள முடிகிறது..
ஆச்சரியம் தந்த கஸ்டமர்கள்
அதுமட்டுமல்ல, இதில் ஆச்சரியம் என்னவென்றால், ஒரு நிமிடத்திற்கு 194 பிரியாணிகள் ஆர்டர் செய்துள்ளார்கள்.. அப்படியானால், கோழி பிரியாணி மக்கள் மனதில் எந்த அளவுக்கு முக்கியமானது என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.. பிரியாணியின் பிரபலத்தால் உணவு கலாச்சாரம் புதிய பரிமாணத்தில் உள்ளதையும் அறிய முடிகிறது..
மொத்தமாக, 2025 ம் ஆண்டு இந்தியர்கள் ஆன்லைன் ஆர்டரில் பிரியாணியை தான் அதிகமாக ஆசைப்பட்டுள்ளார்கள்.. ஆக, கோழி பிரியாணி, ஒரு சாதாரண உணவாக இல்லாமல், மக்களின் உணவு மனப்பான்மையிலும், கலாச்சாரத்திலும் முக்கிய இடத்தை பெற்ற உணவாக மாறியுள்ளது..!!
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications