வாங்க! பாஜகவில் இணைந்துவிடுங்கள்.. நிறைய சாதிக்கலாம்.. சூர்யாவுக்கு அழைப்பு விடுக்கும் பாஜக பிரமுகர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூர்யா பாஜகவில் இணைந்துவிட்டால் நிறைய சாதிக்கலாம் என பாஜக பிரமுகரும் நடிகருமான பாபுகணேஷ் அழைப்பு விடுத்துள்ளார்.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவர் கனவு நனவாகுமா என்ற குழப்பத்தில் இருந்த 3 மாணவர்கள் கடந்த 12-ஆம் தேதி தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்த்து கொண்டனர். இதையடுத்து நீட் தேர்வுக்கு எதிராக கடுமையான கண்டனத்தை பதிவு செய்தார் சூர்யா.

நீதிமன்றத்தையும் அவர் சாடும் வகையில் அறிக்கை வெளியிட்ட சூர்யாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வது குறித்தெல்லாம் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் பெரும்பாலான வழக்கறிஞர்கள் சூர்யாவுக்கு ஆதரவாக பேசினர்.

பாபு கணேஷ்

பாபு கணேஷ்

இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் அறிக்கை குறித்து நடிகரும் பாஜக பிரமுகருமான பாபு கணேஷ் வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் நீங்கள் செய்து கொண்டிருக்கிற ஒவ்வொரு நல்ல விஷயத்தையும் நான் மிகவும் ரசிக்கிறேன். ஒரு சில தவறுகள் செய்யும் போது சுட்டிக் காட்ட வேண்டியது எனது கடமையாக நினைக்கிறேன்.

கண்டனம்

கண்டனம்

பாஜக மாநில கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாநில செயலாளர் என்ற முறையில் பேச வேண்டும் என நினைக்கிறேன். நீங்கள் நீட் தேர்வு பற்றி பேசியிருக்கிறீர்கள். முதலில் வழக்கறிஞராக எனது கண்டனத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.

நீட் தேர்வு

நீட் தேர்வு

பெரும்பாலான மாணவர்கள் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று மருத்துவர்களாகியுள்ளார்கள். அதற்காக அவர்கள் பிரதமர் மோடியை பாராட்டியும் உள்ளார்கள். ஆனால் நீங்கள் இப்படி பேசியிருப்பது மனதுக்கு வருத்தமாக உள்ளது. பாஜக மற்றும் பிரதமரின் திட்டத்தை குறி வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளீர்கள்.

மக்களுக்கு நல்லது

மக்களுக்கு நல்லது

நல்ல தலைமைப் பண்பு மிக்க நீங்கள், மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் நீங்கள், பாஜகவில் இணைந்து உழைத்தால் நல்ல நிலைக்கு வர முடியும். பாஜகவில் இணைந்தால் நீங்கள் நிறைய சாதிக்கலாம். பாஜகவின் குறைகளைச் சுட்டிக் காட்டும் நீங்கள் பிரதமர் செய்த நல்ல விஷயங்களை பாராட்டி ஒரு வீடியோ வெளியிட வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து என பாபு கணேஷ் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+