முதல்வர், முன்னாள் முதல்வர் குறித்து அவதூறு.. கைதான பாஜக கல்யாணராமனின் ட்விட்டர் பக்கம் முடக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர், முன்னாள் முதல்வர் குறித்து ஆபாச பதிவுகளை வெளியிட்ட பாஜக நிர்வாகி கல்யாணராமனின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

பாஜக பிரமுகரான கல்யாணராமன் சமூகவலைதள பக்கமான ட்விட்டரில் தொடர்ந்து ஆபாசமான சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவு செய்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரை சர்ச்சைக்குரிய வகையில் டவிட்டரில் பதிவு செய்தார்.

அது போல் திரைப்பட நடிகையும் மருத்துவருமான ஷர்மிளாவை மிகவும் தரக்குறைவாக விமர்சித்தார். அந்த வகையில் திமுகவின் தருமபுரி எம்பி செந்தில் குமாரின் உதவியாளர் சந்தேஷ், பாஜக கல்யாணராமனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சென்னை சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்தார்.

சென்னை வளசரவாக்கம்

சென்னை வளசரவாக்கம்

அந்த புகாரின் அடிப்படையில் புகார் அளிக்கப்பட்ட 10 மணி நேரத்தில் கல்யாணராமனை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நள்ளிரவில் கைது செய்தனர். சென்னை வளசரவாக்கம் தேவிகுப்பம் அன்பு நகர் பகுதியில் உள்ள கல்யாணராமன் இல்லத்தில் வைத்து அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.

நபிகள் நாயகம் குறித்தும் பேச்சு

நபிகள் நாயகம் குறித்தும் பேச்சு

கடந்த பிப்ரவரி மாதம் கோவையில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசியதாக புகாரின் பேரில் கல்யாணராமன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வரை தரக்குறைவாக பேசியதால் பாஜக கல்யாணராமன் கைது குறித்து குறித்து எம்பி செந்தில்குமார், பதிவிட்டுள்ளார்.

என்ன செய்தி

என்ன செய்தி

அவர் தனது ட்விட்டரில் நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி, வழக்கமாக சர்ச்சைக்குரிய வகையில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசி வந்த பாஜகவை சேர்ந்த கல்யாண ராமன் கைது செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவரது ட்விட்டர் பக்கம் முடக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டர் பக்கம்

ட்விட்டர் பக்கம்


இந்த நிலையில் தொடர்ந்து ஆபாச மற்றும் வன்முறை கருத்துகளைப் பதிவிட்டு வந்ததால், கைது செய்யப்பட்டுள்ள பா.ஜ.க நிர்வாகி கல்யாணராமனின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இதை நெட்டிசன்கள் கொண்டாடி வருகிறார்கள். பாஜக நிர்வாகியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது இதுதான் முதல் முறை என கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+