சென்னையில் பணமோசடியில் கைதாகி ஜாமீனில் வந்த பாஜக பிரமுகரை கடத்திய கும்பல்: 8 பேர் கைது
சென்னை: சென்னையில் பணமோசடியில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த பாஜக பிரமுகரை கடத்திய கும்பலை சேர்ந்த 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை ராஜாஅண்ணாமலைபுரம், ரிவர்வியூ போட்கிளப் ரோட்டை சேர்ந்தவர் நாகராஜன் (30). இவர் முஹம்மது நூர்தின் என்பவரிடம் பணம் வாங்கி ஏமாற்றிய வழக்கில் 26-07-2021 அன்று கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 16-08-2021 அன்று நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்த நாகராஜன் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்துள்ளார்.

மர்ம கும்பல்
அதே போல் 31ம் தேதி கையெழுத்திட்டு வந்து விட்டு திரும்பிய போது காவல் நிலையம் வெளியே வைத்து மர்ம கும்பல் ஒன்று காரில் கடத்தியுள்ளது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசாரிடம் தெரிவித்ததையடுத்து, போலீசார் செல்போன் சிக்னலை வைத்து தேடி போரூர் அருகே நாகராஜனை மீட்டனர்.

சாஸ்திரி நகர் போலீஸார்
அவரை கடத்திச் சென்ற 8 பேரையும் கைது செய்த சாஸ்திரி நகர் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது நாகராஜ் கடந்த 6 மாதத்திற்கு முன்பு, மனோகரன் என்பவரிடம் 10 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி 10 லட்சம் ரூபாயை கமிஷனாக பெற்று லோனும் வாங்கி தராமல், பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றி வந்ததால் ஆத்திரமடைந்து கடத்தியது தெரியவந்தது.

8 பேர் மீது வழக்கு
கைது செய்யப்பட்ட மனோகரன் (42), சிவகுமார் (45), விஜய் (31), அலெக்ஸ் (36), ஐயப்பன் (29), கன்னியப்பன் (34), மணிகண்டன் (28), சத்ய சாய் பாபு (40), ஆகிய எட்டு பேர் மீதும் 147, 148, 294(b), 323,341,365, 506(2), உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இரண்டு கார்களையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைதானது எப்படி?
இவர்கள் 8 பேரையும் போலீஸார் கைது செய்தது எப்படி என்பது குறித்து போலீஸார் கூறுகையில், கடத்தப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த கடத்தல் கும்பலின் செல்போன் சிக்னலை வைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில் நாகராஜை போரூரில் உள்ள ஒரு ஜிம்மில் வைத்திருந்தது தெரியவந்தது. இவர்களை கைது செய்த போலீஸார் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
-
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து












Click it and Unblock the Notifications