பாஜக- அதிமுக கூட்டணி சேர வேண்டும்.. ஆனால் எடப்பாடியை வைத்துக் கொண்டு எப்படி? துக்ளக் குருமூர்த்தி
சென்னை: பாஜகவும் அண்ணா திமுகவும் கூட்டணி சேரத்தான் வேண்டும்; பாஜகவுக்கு 10,12 சீட் அதிமுக கொடுத்திருந்தால் திமுகவுக்கு தனிப் பெரும்பான்மையே கிடைத்திருக்காது; ஸ்டாலினால் ஆட்சியே செய்திருக்க முடியாமல் திமுக ஆட்சி கவிழ்ந்திருக்கும் என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற துக்ளக் 55-வது ஆண்டு விழாவில் இது தொடர்பாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேசியதாவது: பாஜகவும் அதிமுகவும் சேர வேண்டும் என்பதில் நமக்கு சந்தேகமே இல்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி என்ற ஒரு தலைவரை வைத்துக் கொண்டு எப்படி இந்த இணைப்பை ஏற்படுத்துவது என்பது எனக்குப் புரியவில்லை.

ஏனென்றால் எடப்பாடி பழனிசாமியுடன் தனிப்பட்ட முறையில் நான் பேசியிருக்கிறேன்; பழகியிருக்கிறேன். ஒரு அரசியல் தலைவருக்கு உரிய போக்கே அவரிடம் இல்லை. 10,12 சீட் கொடுத்திருந்தால் திமுகவுக்கு பெரும்பான்மை கிடைத்திருக்காது. அதிமுக-பாஜக வெற்றி பெறாதுதான்; ஆனால் திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காது; 2006-ல் கருணாநிதி (மைனாரிட்டி) ஆட்சி செய்தது போல ஸ்டாலினால் ஆட்சி செய்ய முடியாமல் என்றைக்கு வேண்டுமானாலும் திமுக ஆட்சி கவிழும்; ஆட்சியில் பங்கு கேட்பவர்களுக்கு ஸ்டாலினால் மாட்டேன் என்று கூறிவிட முடியாது. இதை எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லையே.. யார் அவருக்கு ஆலோசனை கொடுக்கிறார்? யார் புள்ளி விவரம் கொடுக்கிறார்?
மிகப் பெரிய வாய்ப்பை நழுவ விட்டவர் எடப்பாடி பழனிசாமி. பாஜக- அதிமுக சேர வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிற நான் கூறுகிறேன், பாஜக தன்னுடைய நிலைமையை அதிகமாக மாற்றிக் கொண்டு அதிமுகவை கட்டிக் கொண்டால் பாஜகவுக்குதான் நட்டம் வரும் என்பதை அவர்கள் உணர வேண்டும். இவ்வாறு துக்ளக் குருமூர்த்தி பேசினார்.
-
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications