சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுக எம்.எல்.ஏ. பெயரில் வசூல்வேட்டை; ஓட்டுப்போட்டதற்கு இது போனஸ் பரிசா? பாஜக அட்டாக்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை தி.நகர் பகுதி வியாபாரிகளிடம் திமுக எம்.எல்.ஏ. ஜெ.கருணாநிதியின் பெயரை கூறி அவரது ஆட்கள் வசூல்வேட்டையில் ஈடுபடுவதாக பாஜக இளைஞரணிச் செயலாளர் வினோஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திமுகவுக்கு ஓட்டுப்போட்டதற்காக அளிக்கப்படும் போனஸ் பரிசா இது என அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதனிடையே அண்மைக்கால செயல்பாடுகள் மூலம் எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டிய அதிமுகவின் இடத்தை பாஜக பிடித்துவிட்டது போல் தெரிகிறது.

மாநாடு ரிலீஸ் பிரச்சினைக்கு சிலம்பரசன்தான் காரணம்.. அடுக்கி தள்ளிய பயில்வான் ரங்கநாதன்மாநாடு ரிலீஸ் பிரச்சினைக்கு சிலம்பரசன்தான் காரணம்.. அடுக்கி தள்ளிய பயில்வான் ரங்கநாதன்

தி.நகர்

தி.நகர்

சென்னை தி.நகரை பொறுத்தவரை நாளொன்றுக்கு பல நூறு கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும் மையமாக திகழ்கிறது. அங்குள்ள பிளாட்பாரம் கடைகள் தொடங்கி அடுக்குமாடி கடைகள் வரை ஷாப்பிங் செய்ய மக்கள் பேரார்வம் காட்டுவதால், தினமும் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் சென்னை தி.நகர் தொகுதி மட்டுமே வளம் கொழிக்கும் தொகுதி என்று கூட சொல்லலாம். அந்தளவுக்கு பணம் அங்கு விளையாடக்கூடிய இடம் அது.

வசூல்வேட்டை

வசூல்வேட்டை

இந்நிலையில் தி.நகர் தொகுதி எம்.எல்.ஏ. ஜெ.கருணாநிதியின் பெயரை கூறி அவரது ஆட்கள் சமோசாக்கடைகள், பிளாட்பாரக் கடைகள், தட்டுக்கடைகள் என பல இடங்களில் வசூல்வேட்டை நடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. மாதம் தோறும் ரூ.10,000 முதல் 25,000 வரை பணம் கேட்பதாக வியாபாரிகள் அளித்த புகார் பிரபல வார இதழ் ஒன்றில் கூட செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அதைச் சுட்டிக்காட்டி இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள பாஜக, திமுகவுக்கு எதிரான அட்டாக்கை தொடங்கியிருக்கிறது.

போனஸ் பரிசு

போனஸ் பரிசு

திமுகவுக்கு ஓட்டுப்போட்டதற்காக தி.நகர் எம்.எல்.ஏ. ஜெ.கருணாநிதி மக்களுக்கு அளிக்கும் போனஸ் பரிசா இது என தனது டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ள பாஜக இளைஞரணி செயலாளர் வினோஜ் பி செல்வம், மியூசிக் ஸ்டார்ட் என நடிகர் கவுண்டமணியின் நகைச்சுவை வசனம் ஒன்றையும் சுட்டிக்காட்டியுள்ளார். விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் பாஜக கையிலெடுத்துள்ள இந்த விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

திமுக -அதிமுக

திமுக -அதிமுக

முந்தைய அதிமுக ஆட்சியின் போதும் தி.நகர் பகுதி வியாபாரிகள் அப்போதைய அதிமுக எம்.எல்.ஏ. மீது இதேபோன்ற குற்றச்சாட்டை முன் வைத்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஒரு எதிர்க்கட்சியாக அதிமுக கையிலெடுத்து அரசியல் செய்ய வேண்டிய விவகாரங்களை எல்லாம் இப்போது பாஜக முன்னெடுத்து கேள்விக்கணைகளை திமுகவை நோக்கி வீசி வருகிறது.

English summary
Bjp allegations on T.Nagar Dmk mla J.Karunanidhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X