Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிர்வாகத்தில் பெரிய ஓட்டை.. நிதி வந்து குவிந்தாலும் பயனில்லை.. முதல்வருக்கு பாஜக வைத்த கோரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அரசு பள்ளிகளின் தரம் இது நாள் வரை குறைந்ததற்கு காரணம் 'நிதி இல்லாமை' அல்ல 'நிதி மேலாண்மை இல்லாமை' தான் என்பதை முதல்வர் ஸ்டாலின் உணர வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்காக பொதுச்சமூக பங்களிப்பை பெறும் விதமாக நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அரசுப் பள்ளிகளில் கட்டிட வசதிகள் ஆய்வகங்கள், கழிவறை, நூலகங்கள் உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதற்காக முன்னாள் மாணவர்கள், தனி நபர்கள், நிறுவனங்கள், லாப நோக்கம் இல்லாமல் செயல்படும் சமூக அமைப்புகளை இணைப்பதே நம்ம ஸ்கூல் திட்டம்.

நம்ம ஸ்கூல் திட்டம்

நம்ம ஸ்கூல் திட்டம்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் 'நம்ம ஸ்கூல்' பவுண்டேஷன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பள்ளிக் கல்வித்துறை சார்பில் தமிழகத்தில் இயங்கி வரும் சுமார் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் அனைவரின் பங்களிப்புடன் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தனியார் பள்ளிகளுக்கு நிகரான பள்ளியாக உயர்த்துவதற்காக இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. சி.எஸ்.ஆர் நிதியை கொண்டு அரசுப் பள்ளிகளில் மேம்பாட்டு பணிகளை தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் .ஸ்டாலின் முதல் நபராக தனது சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சத்தை வழங்கினார்.

பாஜக

பாஜக

இத்திட்டம் குறித்து பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசு பள்ளிகளை தரம் உயர்த்த நிதி உதவி வாரி வழங்குங்கள் என்ற முழக்கத்தோடு 'நம்ம ஸ்கூல் ஃபவுண்டேசன் ' என்ற திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கவும், அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளதோடு, இந்த ஃபவுண்டேசன் தலைவராக வேணு ஸ்ரீநிவாசன் அவர்களையும், தூதுவராக விஸ்வநாதன் ஆனந்த் அவர்களையும் நியமித்துள்ளதை பாராட்டி வரவேற்கிறோம்.

நிதி மேலாண்மை இல்லாமை

நிதி மேலாண்மை இல்லாமை

அதே வேளையில், அரசு பள்ளிகளின் தரம் இது நாள் வரை குறைந்ததற்கு காரணம் 'நிதி இல்லாமை' அல்ல 'நிதி மேலாண்மை இல்லாமை' தான் என்பதை முதல்வர் அவர்கள் உணர வேண்டும். இப்போதுள்ள தரமற்ற கல்விக்கு காரணம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போதிய சலுகைகள் இல்லாததால் மட்டுமல்ல, அவர்களுக்கான சலுகைகள் நிர்வாக சீர்கேடுகளால் மறுக்கப்பட்டதால் தான் என்பதை மறுக்க முடியுமா? தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை விட அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம் பன்மடங்கு அளிக்கப்பட்டும் தரமான கல்வி மாணவ மாணவிகளுக்கு சென்றடையவில்லை என்பதை மறுக்க முடியுமா?

மனசாட்சி

மனசாட்சி

இது நிதியினால் ஏற்பட்ட தரக்குறைவு அல்ல, மாநில ஆட்சியாளர்களின், நிதி சுரண்டலினால் ஏற்பட்ட தரக்குறைவு என்ற உண்மையை நாடறியும். அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புக்கு இது நாள் வரை செலவிடப்பட்ட பல கோடிகளில் ஊழல் முறைகேடுகள் மூலம் ஊழல் அரசு அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்டது உண்மையா இல்லையா? ஊழல் இல்லாதிருந்தால், முறைகேடுகள் நடக்காமல் தடுக்கப்பட்டிருந்தால், அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு பலமாகியிருக்குமா இல்லையா என்பதை மனசாட்சி உள்ள கல்வியாளர்கள் உணர்ந்தே உள்ளார்கள்.

ஊழல்துறை

ஊழல்துறை

அரசு பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியாளர்கள் வேலைக்கு பல லட்சங்கள் லஞ்சம் கொடுக்கப்படுகிறதா இல்லையா? பணியிட மாற்றங்களுக்கு லஞ்சம், அரசுப் பள்ளிகளில் கொள்முதல் செய்யப்படும் அனைத்து பொருட்களிலும் ஊழல், லஞ்சம் என முறைகேடுகள் தாண்டவமாடுகிறதா இல்லையா? கல்வித்துறையை ஊழல்துறையாக மாற்றி வருடங்கள் பல ஓடி விட்டன. தமிழக அரசு பள்ளிகளுக்கு இன்றைய தேவை லஞ்ச ஊழலற்ற, முறைகேடுகளற்ற நிர்வாகம் தானேயன்றி நிதி மட்டுமல்ல. கடந்த 30 வருடங்களில் தனியார் பள்ளிகளை ஊக்குவிக்க திட்டமிட்ட ரீதியில் அரசு பள்ளிகளின் சீரழிவுக்கு காரணமாகி, கல்வியை வியாபாரமாக்கிய அத்துணை பெருமையும் தமிழக அரசியல்வாதிகளையும், அதற்கு துணை நின்ற அதிகாரிகளையுமே சாரும்.

நிதி வந்து குவிந்தாலும்

நிதி வந்து குவிந்தாலும்

முதலமைச்சரின் இன்றைய அறிக்கையானது கவர்ச்சியாக இருந்தாலும், லஞ்ச, ஊழல், முறைகேடுகள் தடுக்கப்பட்டு அரசின் நிதி மேலாண்மை முறையாக இருந்தால் மட்டுமே அரசு பள்ளிகள் சீரமைக்கப்பட்டு, மேம்படுத்தப்படும். இல்லையேல், நிதி வந்து குவிந்தாலும் சீர்கெட்டுப் போயிருக்கும் அமைப்பில் உள்ள ஓட்டையின் மூலம் வெளியேறிக் கொண்டேயிருக்கும். சீர்கேட்டின் தன்மையை உணர்ந்து ஆவன செய்வாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+