தேசிய ஜனநாயக கூட்டணி பலவீனம் நாட்டிற்கு, தமிழ்நாட்டிற்கு நல்லது.. அதிமுக முடிவை வரவேற்கிறோம்: விசிக
சென்னை: பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக அறிவித்த நிலையில், இந்த முடிவை வரவேற்பதாக விசிக கூறியுள்ளது. மேலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பலவீனப்படுவது இந்த நாட்டுக்கு நல்லது. ஜனநாயகத்திற்கு நல்லது. தமிழ்நாட்டிற்கு நல்லது என்றும் கூறியுள்ளது.
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அக்கட்சி தலைமை இன்று அறிவித்துள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்தை அக்கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இதனிடையே, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியிருப்பது தமிழ்நாட்டுக்கு நல்லது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி ரவிக்குமார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி ரவிக்குமார் தனியார் செய்தி தொலைக்காட்சியிடம் பேசியதாவது:- அதிமுக முடிவை நான் வரவேற்கிறேன். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பலவீனப்படுவது இந்த நாட்டுக்கு நல்லது. ஜனநாயகத்திற்கு நல்லது. தமிழ்நாட்டிற்கு நல்லது. எனவே அதில் இருந்து எந்த கட்சி வெளியேறினாலும் அதை நாங்கள் வரவேற்கிறோம்.
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமையாக தமிழ்நாட்டில் விளங்கி வந்தது. அதிமுகவே அதில் இருந்து வெளியேறி இருப்பது வரவேற்கதக்கது. அதை நான் வரவேற்கிறேன். பாஜக அரசியலோ... கருத்தியலோ.. அரசாங்கத்தின் நடவடிக்கைகளிளோ எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று சொல்லி அதிமுக இதை அறிவித்து இருந்தால் நாங்கள் வேறு விதமாக பார்த்து இருப்போம்.
அவர்கள் சொன்னது என்னவென்றால் எங்கள் மாநாட்டை கொச்சை படுத்திவிட்டோம். எங்கள் தலைவரை கொச்சை படுத்திவிட்டோம்.. என்றுதான் சொன்னார்களே தவிர... கொள்கை தமிழ்நாட்டிற்கு உகந்ததாக இல்லை என்று அவர்கள் சொல்லவில்லை. எனவே இது எப்போது வேண்டும் என்றாலும் சேர்ந்து கொள்ளலாம். தனிப்பட்ட காரணத்தினால் இந்த மன வருத்தம் ஏற்பட்டுள்ளது.
எப்போது வேண்டும் என்றாலும் சேர்ந்து அதிமுக பாஜக சேர்ந்து கொள்ளலாம் என்று ஒரு எண்ணத்தில் தான் எங்கள் தலைவர் ( தொல் திருமாவளவன்) அன்றைக்கு சொன்னார். இன்றைக்கும் கூட அவர்கள் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பு பாஜக கூட்டணி இல்லை என்ற முடிவு... அதே போன்றதாகத்தான் இருக்கிறது. அதிமுக ஜெயலலிதா காலத்தில் எப்படி பாஜகவை கணித்ததோ அப்படி கணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
குறிவைத்து அடித்த எடப்பாடி பழனிசாமி.. வீழ்த்தப்பட்ட ஜெயக்குமார்.. அதிமுக 2021 தேர்தல் பிளாஷ்பேக் -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி!












Click it and Unblock the Notifications