எனக்கோ எனது குடும்பத்தினருக்கோ ஏதாவது நடந்தால் அதற்கு முதல்வரே பொறுப்பு.. அமர் பிரசாத் ரெட்டி பகீர்!
சென்னை: எனக்கோ அல்லது எனது குடும்பத்தினருக்கோ ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு முதல்வர் ஸ்டாலினே பொறுப்பு என பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவராகச் செயல்பட்டு வருகிறார் அமர் பிரசாத் ரெட்டி. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படுகிறார். பாஜக மேலிடத்துடனும் நெருக்கமான தொடர்பு உள்ளவர். பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியவர் இந்த அமர் பிரசாத்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு கட்சியின் கொடிக் கம்பம் நிறுவப்பட்ட போது ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டார். அவர் மீது ஏற்கனவே இருந்த மேலும் 2 வழக்குகளிலும் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார் அமர் பிரசாத் ரெட்டி. அதன்பிறகு, பாஜக பெண் நிர்வாகி ஒருவரை அமர் பிரசாத் ரெட்டி கட்டளையின்பேரில் வீடு புகுந்து பாஜகவினர் தாக்கியதாக எழுந்த புகாரில் மீண்டும் போலீசாரால் தேடப்பட்டு வந்தார் அமர் பிரசாத் ரெட்டி. எனினும், இந்த வழக்கில் கைதாகாமல் இருக்க முன் ஜாமீன் பெற்றார் அமர் பிரசாத்.
இந்நிலையில், லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜகவில் அமர் பிரசாத் ரெட்டிக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. லோக்சபா தேர்தலில் போட்டியிட அமர் பிரசாத் ரெட்டிக்கு சீட் வழங்கப்படாத நிலையில், தமிழ்நாடு முழுவதும் அண்ணாமலையின் பரப்புரை பயணத்திற்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் அமர் பிரசாத்.

இந்நிலையில், அமர் பிரசாத் ரெட்டி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளார். அவரது பதிவில், "தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான PFIல் இருந்து எனது குடும்பம் மற்றும் எனது பாதுகாப்பிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு விண்ணப்பிக்குமாறு, காவல்துறை உளவுத்துறையின் நம்பகமான சோர்ஸ்களில் இருந்து எனக்கு தகவல் கிடைத்தது.
மேலும், பல்வேறு கவலையான சம்பவங்களை எடுத்துரைத்து டிஜிபி மற்றும் கமிஷனருக்கு கடிதம் அனுப்பவும் எனது அம்மா முயற்சி எடுத்துள்ளார். கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர், கமிஷனரிடம், தன் பணியை காப்பாற்றும் நோக்கில், பொய்யான அறிக்கை அளித்துள்ளது என் கவனத்துக்கு வந்துள்ளது. எனக்கோ அல்லது எனது குடும்பத்தினருக்கோ ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக காவல்துறையினர் தான் பொறுப்பு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
-
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications