நாங்கதான் தலைமை.. அமித் ஷா சொன்ன அந்த வார்த்தையை கவனிச்சீங்களா? அதிமுகவிற்கு கிடுக்கிப்பிடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் உள்துறை அமைச்சர் அமித் ஷா செய்த போஸ்ட் ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இதில் திமுகவிற்கு செக் வைக்காமல் மறைமுகமாக அதிமுகவிற்கும் செக் வைக்கும் வகையில் பேசி உள்ளார்.

பாஜக, அதிமுக இரண்டும் மாறி மாறி கூட்டணிக்கு தூதுவிட தொடங்கி உள்ளன. திமுகதான் எதிரி; வேற எந்த கட்சியுமே எதிரி இல்லை; திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறவே கூடாது என அதிரடியாக யோசிக்க முடியாத அளவிற்கு பல்டி அடித்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

இன்னொரு பக்கம் அண்ணா திமுக எங்களுக்கு எதிரியே இல்லை..திமுகதான் எங்கள் ஒரே எதிரி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கூறியிருக்கிறார். இதனால் 2026 சட்டசபை தேர்தலில் மீண்டும் அண்ணா திமுக- பாஜக கூட்டணி அமையும் என்றே கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் தமிழக வெற்றிக் கழகம் தனித்து விடப்படுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

BJP Amit Shah indirect pressure to AIADMK Edappadi Palanisamy on BJP alliance dealings

யார் தலையீடு

இதற்கு பின் கேரளாவை சேர்ந்த தமிழக புள்ளி ஒருவரின் தலையீடுதான் காரணம் என்கிறார்கள். கேரளாவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அந்த தமிழர் தான் கடந்த சில தினங்களுக்கு முன் எடப்பாடியை சந்தித்து பேசி உள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த சந்திப்பில்தான் அதிமுக - பாஜக கூட்டணி பற்றி பேசியதாக கூறப்படுகிறது. இதில் இந்த கூட்டணியை உருவாக்குவதற்கான பாசிட்டிவ் விஷயங்களை எடப்பாடி தெரிவித்து உள்ளாராம். இதனால் பாஜக இன்.. தவெக அவுட் என்கிறார்கள்.

எடப்பாடி - அமித் ஷா சந்திப்பு

நேற்று பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடத்தினார். சுமார் ஒருமணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிமுக அலுவலகத்தை பார்வையிட டெல்லி வந்ததாக கூறிய எடப்பாடி பழனிசாமி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேல் ஆலோசனை நடத்தினார். முதலில் அதிமுக நிர்வாகிகளை கூட்டாக சந்தித்த அமித்ஷா, பிறகு எடப்பாடி பழனிசாமி உடன் தனியாகவும் பேசியுள்ளார்.

நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் உள்துறை அமைச்சர் அமித் ஷா செய்த போஸ்ட் ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இதில் திமுகவிற்கு செக் வைக்காமல் மறைமுகமாக அதிமுகவிற்கும் செக் வைக்கும் வகையில் பேசி உள்ளார். அதில் 2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும், என்று கூறி உள்ளார்.

Take a Poll

நேரடியாக பார்த்தால் இதில் திமுகவை அமித் ஷா விமர்சனம் செய்வது தெரியும். ஆனால் இன்னொரு பக்கம் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு என்றும் அமித் ஷா கூறி உள்ளார். அதன்படி அதிமுக தலைமையிலான கூட்டணி என்று சொல்லாமல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்று கூறி உள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்பது பாஜக தலைமையிலான அரசு. அது அதிமுக தலைமையிலான அரசு இல்லை. இதன் மூலம் கூட்டணிக்கு நாங்கள்தான் தலைமை என்று அமித் ஷா சொல்லாமல் சொல்கிறாரோ என்று கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+