அதானி மீது FIR போட விடாமல் பாதுகாக்கும் மோடி, ஸ்டாலின்.. அதிர்ச்சி கிளப்பும் அறப்போர் இயக்கம்!
சென்னை: இந்தியா முழுவதும் 50,000 கோடிக்கு நிலக்கரி ஊழல் நடந்துள்ளதாகவும், தமிழகத்தில் மட்டும் 3,000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், ஆனால், பிரதமர் மோடியும், முதல்வர் ஸ்டாலினும் அதானியை பாதுகாப்பதாகவும் அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவிற்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ஃபைனான்ஸ் டைம்ஸ் என்ற இதழ் அம்பலப்படுத்தியுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை நிலக்கரி இறக்குமதி ஊழலில் அதானி நிறுவனம் ஈடுபட்டு வருவதாக பைனான்ஸ் டைம்ஸ் இதழ் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

முன்னதாகவே, அறப்போர் இயக்கம் நிலக்கரி இறக்குமதியில் ஊழல் நடைபெறுவதாக குற்றம்சாட்டி வந்தது. மின்சார வாரியத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்வதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெறுவதாகவும், ஆனால், அரசு நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காத்து வருவதாகவும் அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், ஃபைனான்ஸ் டைம்ஸ் செய்தியை மேற்கோள் காட்டியுள்ள அறப்போர் இயக்கம் தமது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், "இந்தியா முழுவதும் 50,000 கோடிக்கு நிலக்கரி ஊழல். தமிழகத்தில் மட்டும் 3,000 கோடி ஊழல். ஆனால் பிரதமர் மோடியும் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதானி மீது எஃப்.ஐ.ஆர் போட விடாமல் இருவரும் பாதுகாக்கிறார்கள்.
இந்தியா முழுவதும் 50000 கோடிக்கு நிலக்கரி ஊழல். தமிழகத்தில் மட்டும் 3000 கோடி ஊழல். ஆனால் மோடியும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஸ்டாலினும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதானி மீது FIR போட விடாமல் இருவரும் பாதுகாக்கிறார்கள்.
— Arappor Iyakkam (@Arappor) October 13, 2023
தேசிய கட்சிகளில் தேர்தல் பத்திரம் மூலம் அதிக ரகசிய நன்கொடை… pic.twitter.com/AAtWokfGmy
தேசிய கட்சிகளில் தேர்தல் பத்திரம் மூலம் அதிக ரகசிய நன்கொடை வாங்கியது பாஜக. மாநில கட்சிகளில் தேர்தல் பத்திரம் மூலம் அதிக ரகசிய நன்கொடை வாங்கிய கட்சி திமுக. தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடைகள் வாங்கும் அரசியல் கட்சிகள் அதை கொடுத்த நபர் மற்றும் தொகை பற்றிய விவரங்களை ரகசியமாக வைத்துக்கொள்ள அனுமதி வழங்கி மோடி கொண்டு வந்த சட்டத்தை எதிர்க்காமல் ஆதரித்தது திமுக.
தற்பொழுது மாநில கட்சிகளில் அதிக ரகசிய நன்கொடை வாங்கி முதலிடத்தில் இருக்கிறது திமுக. இந்த இரண்டு கட்சிகளுக்கும் ரகசியமாக நன்கொடை கொடுத்து பயனடைந்தவர் யார் என்பது அவரவர் கற்பனைக்கு.!" எனத் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications