தமிழ்நாட்டுக்காக ஜெயலலிதா செய்தவை அவரது புகழை கூறும்.. நினைவுகூர்ந்த அண்ணாமலை, தமிழிசை!
சென்னை: ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் ஜெயலலிதாவை நினைவுகூர்ந்துள்ளனர்.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், அரசியல் தலைவருமான ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் இன்று. 1948ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி பிறந்தவர் ஜெயலலிதா. நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த ஜெயலலிதா, 1982 ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி கடலூரில் நடைபெற்ற விழாவில் எம்ஜிஆர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்து, அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார்.

அதன் பிறகு 1984 மார்ச் 24ஆம் நாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, 1989ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணி சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 27 இடங்களைக் கைப்பற்றியது. ஜானகி தலைமையிலான அதிமுக அணி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. இதனால் ஜானகி அரசியல் களத்திலிருந்து விலகினார். ஜெயலலிதா அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர், செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினம் இன்று.
— K.Annamalai (@annamalai_k) February 24, 2024
தமிழக மக்கள் நலனுக்காகவும், சமூக நலனுக்காகவும், அவர் செயல்படுத்திய நலத்திட்டங்கள், என்றும் அவரது புகழைக் கூறும். pic.twitter.com/z6ErV4gqbQ
இதையடுத்து அரசியலில் ஏறுமுகத்தை கண்ட இவர் 1991ஆம் ஆண்டு முதலமைச்சர் ஆனார். தமிழக முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார் ஜெயலலிதா. உடல்நலக்குறைவால் கடந்த 2016ஆம் ஆண்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 2 மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி உயிரிழந்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் நலத்திட்ட உதவிகள் இன்று செய்யப்படுகின்றன. அத்துடன் அதிமுக சார்பில் 5 நாட்களுக்கு பொதுக் கூட்டங்களும் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, அவரை நினைவுகூர்ந்துள்ளார்.
பணிந்து நின்றுதான் பணிசெய்ய வேண்டும் என்பதில்லை...
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) February 24, 2024
துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்த பெண் ஆளுமை மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினமான இன்று...
அவர் என்மீது காட்டிய தனி அன்பும்,பண்பும் என்றும் என் நினைவில்...#Jayalalitha… pic.twitter.com/qK6RPDVF2F
ஜெயலலிதா 76வது பிறந்தநாள்.. உருவப் படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில், “தமிழக முன்னாள் முதலமைச்சர், செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினம் இன்று. தமிழக மக்கள் நலனுக்காகவும், சமூக நலனுக்காகவும், அவர் செயல்படுத்திய நலத்திட்டங்கள், என்றும் அவரது புகழைக் கூறும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தனது சமூக வலைதள பக்கத்தில், “பணிந்து நின்றுதான் பணிசெய்ய வேண்டும் என்பதில்லை... துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்த பெண் ஆளுமை மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினமான இன்று... அவர் என்மீது காட்டிய தனி அன்பும், பண்பும் என்றும் என் நினைவில்..” என்று குறிப்பிட்டுள்ளார்.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications