கோவையில் அக்.31-ல் பந்த்.. மாவட்ட பாஜக தன்னிச்சையாக செயல்படுவது ஏன்.. அண்ணாமலை பரபர விளக்கம்
சென்னை: கோவையில் நாளை மறுதினம் பந்த் போராட்டம் அறிவித்து மாவட்ட பாஜக தன்னிச்சையாக செயல்படுவது ஏன் என்பது குறித்து தமிழக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
கோவை உக்கடம் அருகே ஈஸ்வரன் கோயில் தெருவில் கார் சிலிண்டர் வெடித்ததில் உக்கசம் பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் உயிர் இழந்தார். இது குறித்து கோவை உக்கடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக 5 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் இறந்த முபின் உள்ளிட்டோருக்கு கேரள குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களுடன் தொடர்பிருப்பதாக விசாரணையில் தெரியவந்தது. மேலும் முபினின் வீட்டிலிருந்து 100 கிலோ வெடி பொருட்களை கைப்பற்றப்பட்டன.

அஜாக்கிரதை
இந்த சம்பவத்தில் மாநில அரசின் அஜாக்கிரதை போக்கை கண்டித்து கோவை மாவட்ட பாஜகவினர் மற்றும் மக்கள் இணைந்து வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்கள். இது தொடர்பாக தனிநபர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் அண்ணாமலை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த பந்தானது தமிழகம் முழுவதுக்கும் அறிவிக்கப்பட்டது அல்ல.

எந்த சம்பந்தமும் இல்லை
இதற்கும் அண்ணாமலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என வாதாடினார். இந்த சம்பவம் தொடர்பாக நவம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. இது குறித்து அண்ணாமலை இன்றைய தினம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், கோவையில் அக்டோபர் 31 ஆம் தேதி பந்த் போராட்டத்தை அந்த மாவட்ட பாஜகவினரும் மக்களும் அறிவித்துள்ளனர்.

நிர்பந்தம் இல்லை
இதில் மாநில தலைவராக நான் எந்த நிர்பந்தமும் செய்யவில்லை. ஆயுத பூஜை, தீபாவளி முடிந்து இப்போதுதான் வியாபாரம் களைகட்டியுள்ளது , மேலும் நாளை ஞாயிற்றுக்கிழமை கடைகளுக்கு விடுமுறை, திங்கள் மீண்டும் பந்த்தால் கடையடைப்பு என்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என வியாபாரிகள் சங்கத்தினர் கேட்டுள்ளார்கள்.

பந்த்
இதனால் பந்தை நடத்துவதும் நிறுத்துவதும் முழுக்க முழுக்க மாவட்ட பாஜக மற்றும் மக்களின் முடிவாகும். இதில் என் தலையீடு எதுவும் இல்லை. ஒரு வேளை கோவை சம்பவத்தை என்ஐஏவுக்கு மாற்றுவதில் தமிழக அரது இன்னும் தாமதப்படுத்தியிருந்தால் தமிழகம் முழுவதும் பந்த் போராட்டத்திற்கு நான் ஏற்பாடு செய்திருப்பேன்.

கார் வெடிப்பு சம்பவம்
கடந்த 18 ஆம் தேதியே கோவையில் கார் வெடிப்பு சம்பவம் குறித்து மத்திய உளவுத்துறை தமிழக டிஜிபிக்கும் கோவை மாநகராட்சி கமிஷனருக்கும் கடிதம் எழுதியுள்ளது. ஆனால் அவர்கள் இருவருமே அந்த கடிதம் வரவே இல்லை என சாதிக்கிறார்கள். ஆனால் அந்த கடிதம் அனுப்பப்பட்டதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. இது குறித்து வழக்கு என வரும் போது ஆதாரத்தை நீதிமன்றத்தில் ஒப்படைப்பேன் என்றார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக?












Click it and Unblock the Notifications