டார்கெட் நாடார்கள்.. தேர்தலுக்கு துண்டு போடும் அண்ணாமலை! நாடார் மகாஜன சங்கத்துக்கு லெட்டரில் ஐஸ்
சென்னை: நாடார் மகாஜன சங்கத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு நாடார் சமூக மக்கள் மற்றும் அந்த சங்கத்தின் செயல்பாடுகளை பாராட்டி கடிதம் எழுதி இருக்கிறார் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் சமூக ரீதியாக மக்களை கவரும் வேலைகளிலும் ஈடுபட தொடங்கி இருக்கிறார்கள். பல்வேறு சமூக தலைவர்கள், அடையாளர்களை போற்றுவது, பாராட்டுவது போன்ற காரியங்களை தலைவர்கள் தற்போது கையில் எடுத்து இருக்கிறார்கள். இந்த நிலையில் நாடார் மகாஜன சங்கத்தின் 72 ஆவது ஆண்டு விழா இன்று மதுரையில் நடைபெற்றது. இதனை அடுத்து நாடார் மகாஜன சங்கத்தின் பொதுச் செயலாளர் கரிகோல்ராஜுக்கு தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி இருக்கிறார்.

அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, "ஏராளமான மக்கள் பணிகளை, எதிர்பார்ப்பு இல்லாமல் செய்து, 15 க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை திறம்பட நிர்வகித்து வரும், நாடார் மகாஜன சங்கத்தின் 72 ஆவது ஆண்டு விழா வெற்றிகரமாக நடைபெறுவதை அறிந்து நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். பாரத தேசம் முழுவதும், நாடார் இன மக்களுக்கு நன்மைகளை செய்வதற்காக கணக்கற்ற சங்கங்கள், தனி அமைப்புகள் இருந்தாலும், அத்தனை அமைப்புகளுக்கும் ஒரு தாய் அமைப்பாக விளங்கி, இனத்தின் மேன்மைக்கும், இந்திய நாட்டின் மேம்பாட்டிற்கும் உழைத்துக் கொண்டிருக்கும், பாரம்பரியம் மிக்க நாடார் மகாஜன சங்கத்தின் ஆண்டு விழா என்பது பெருமைக்குரிய நிகழ்ச்சியாகும்.
தொழில் வணிகம், கல்வி, கட்டுமானம், விவசாயம் என்று எந்தத் துறையை எடுத்தாலும் அதில் உழைப்பினால் வெற்றியை ஈர்த்துக் கொண்டிருக்கும் நாடார் இனத்தின் சகோதரர்களுக்கிடையே அன்பையும் ஆதரவையும் ஒற்றுமையையும் வளர்த்துக் கொண்டிருக்கும் தங்கள் சங்கத்தின் பணி மற்றவர்களுக்கு எல்லாம் ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறது. அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஆற்றல் மிக்க அமைப்பாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் தங்கள் நாடார் மகாஜன சங்கம், நற்பணிகள் புரிவதிலும், நாட்டு மக்களுக்கு நல்லதோர் உதாரணமாக திகழ்கிறது.
என் மண் என் மக்கள் பாதை யாத்திரை நிகழ்ச்சியில் நான் பங்கு கொண்டிருப்பதால், மதுரையில் நடைபெறும் தங்கள் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஒரு நல்ல வாய்ப்பினை என்னால் பெற முடியவில்லை. தங்கள் விழா சிறப்பாக நடைபெறவும் தாங்கள் முன்னெடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளை குவிக்கவும், என் அன்பையும் நல்வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் ஒத்துழைப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு இருந்தார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications