Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தோல்வி.. அதிமுக ஒன்று சேராததே காரணம்.. எடப்பாடியை விமர்சித்த அண்ணாமலை

ஆளும்கட்சியை எதிர்க்க எவ்வளவு பலம் தேவை என்பதை இடைத்தேர்தல் உணர்த்துகிறது - அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு அக்கட்சி ஒன்று சேராதே காரணம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் கடந்த 27ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் 4 முனை போட்டி ஏற்பட்டது. இதில் அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்த தொகுதியில் நடந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்தது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. ஆரம்பத்திலிருந்தே ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் இருந்து வந்தார்.

காங்கிரஸ் வேட்பாளர்

காங்கிரஸ் வேட்பாளர்

மொத்தம் 15 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிந்தது. அதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகளையும் அதிமுக 43981 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 10804 வாக்குகளையும் தேமுதிக 1177 வாக்குகளையும் பெற்றுள்ளது. இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வென்றதாக அறிவிக்கப்பட்டார். மொத்தம் வாக்கு வித்தியாசம் 66,575 ஆகும்.

வெற்றி உறுதி

வெற்றி உறுதி

எனவே காலையிலேயே இளங்கோவனின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில் காலை முதலே சென்னை அண்ணா அறிவாலயம். ஈரோடு கிழக்கில் உள்ள காங்கிரஸ் தேர்தல் அலுவலகம் உள்ளிட்டவை தொண்டர்கள் கூட்டத்தால் திக்குமுக்காடின. தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுவதும் இனிப்பு வழங்குவதும் என கோலாகலமாக வெற்றியை கொண்டாடினர்.

ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈவிகேஎஸ் இளங்கோவன்

இந்த தேர்தல் முடிவுகள் குறித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், இந்த வெற்றி முதல்வரையே சாரும். அமைச்சர்கள், நிர்வாகிகள் எல்லாம் அவர்களுக்காக கூட இத்தனை அளவுக்கு வெயிலில் கஷ்டப்பட்டிருக்கமாட்டார்கள். ஆனால் என் வெற்றிக்காக அரும்பாடுபட்டார்கள். அவர்களுக்கு நன்றி என தெரிவித்தார்.

அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் பேட்டி

அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் பேட்டி

பின்னர் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வெற்றியை தேடிக் கொடுத்த வாக்காளர்களுக்கு நன்றி. திராவிட மாடல் ஆட்சியை இன்னும் சிறப்புடன் நடத்த மக்கள் ஆதரவை வழங்கி இருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் பதிலடி

எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் பதிலடி

எடப்பாடி பழனிசாமி தன்னை மறந்து பேசிய பேச்சிற்கு மக்கள் நல்ல பதிலடி கொடுத்திருக்கிறார்கள். 20 மாத கால திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம். நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி அமைந்துள்ளது. நான் ஏற்கனவே தேசிய அரசியலில் தான் இருக்கிறேன். யார் பிரதமர் வேட்பாளர் என்பதை விட யார் பிரதமராக வரக் கூடாது என்பதுதான் முக்கியம் என ஸ்டாலின் தெரிவித்தார்.

ஜனநாயகம் தோற்றுவிட்டது

ஜனநாயகம் தோற்றுவிட்டது

இந்த தேர்தல் வெற்றி குறித்து அதிமுக வேட்பாளர் தென்னரசு பேசுகையில் ஜனநாயகம் தோற்றுவிட்டது. பணநாயகம் வென்றுவிட்டது என்றார். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில் அதிமுக ஒன்று சேராததே தேர்தல் தோல்விக்கு காரணம். தேர்தலில் யார் நிற்க வேண்டும். யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என தேர்தலுக்கு முன்பே அதிமுகவில் பிரச்சினை எழுந்தது. இரட்டை இலை சின்னத்தில் நிற்க வேண்டுமா அல்லது சுயேச்சை சின்னத்தில் நிற்க வேண்டுமா என்ற குழப்பமும் இருந்தது. இடைத்தேர்தலில் வலிமையுடன் போட்டியிட வேண்டும் என பாஜக அப்போதே கூறியது. மேலும் ஒரே சின்னத்தில் ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் நிற்க வேண்டும் என்பதை பாஜக முன்பே கூறியது. ஆனால் இதை சொன்னதற்காக எங்கள் மீது சிலர் கோபப்பட்டனர். ஆளும்கட்சியை எதிர்க்க எவ்வளவு பலம் தேவை என்பதை இடைத்தேர்தல் உணர்த்துகிறது. 2024 லோக்சபா தேர்தல் பாஜகவிற்கான தேர்தலாக இருக்கும். எனினும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் கொடுத்த தீர்ப்பை தலை வணங்கி ஏற்கிறோம் என அண்ணாமலை தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கில் இளங்கோவன்

ஈரோடு கிழக்கில் இளங்கோவன்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார்களை மாறி மாறி கூறி கொண்டனர். அது போல் பட்டியில் அடைத்து வைத்து வாக்கு சேகரிக்கிறார்கள் என்றெல்லாம் புகார்கள் எழுந்தன. ஆயினும் எல்லாவற்றையும் தாண்டியும் ஈவிகேஎஸ் இளங்கோவன் வென்றார். அவர் ஏற்கெனவே தனது மகன் விட்டுச் சென்ற பணியை செய்யவுள்ளேன் என தெரிவித்திருந்தார். எனவே தொகுதி மக்கள் இளங்கோவனுக்கு ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளார்கள் என்றே கருதப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+