சூப்பர்! உ.பி அரசை பின்பற்றுங்க.. புதிய கல்வி கொள்கையை செயல்படுத்தும் தமிழக அரசுக்கு நன்றி: அண்ணாமலை
சென்னை: உத்தர பிரதேச பாஜக அரசை தொடர்ந்து, தமிழக அரசும் தற்போது பள்ளிப் பாடத்திட்டத்தை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொள்வது பாராட்டுக்குரியது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் மேம்பாட்டுக்காக பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் பல்வேறு செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி 'மைக்ரோசாஃப்ட்' நிறுவனத்துடன் இணைந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களை பயிற்றுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு குறித்த பாடத்திட்டம், தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுதொடர்பான செய்தியை தமிழக முதல்வர் ஸ்டாலின், சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.

இதையடுத்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழக முதல்வரின் செய்தியைப் பகிர்ந்து, தமிழக அரசுக்கு பாஜக சார்பில் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், உத்தரப் பிரதேச மாநில அரசு கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்திருந்த நிலையில், தமிழக அரசும் தற்போது பள்ளிப் பாடத்திட்டத்தை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொள்வது பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 2022 ஆம் ஆண்டு மத்திய அரசின் சிபிஎஸ்இ ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, தமிழக பள்ளிகளிலும் செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த பாடத்திட்டத்தைச் அறிமுகப்படுத்தியதற்காக, தமிழக அரசுக்கு தமிழக பாஜக சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பாடத் திட்டத்திற்காக, சிபிஎஸ்இ கல்வி ஆணையம், ஒப்பந்தம் செய்துள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடனேயே, தமிழக அரசும் ஒப்பந்தம் செய்திருப்பது மகிழ்ச்சி.

வரும் கல்வி ஆண்டு முதல் செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக உத்தரப் பிரதேச மாநில அரசு கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்திருந்த நிலையில், தமிழக அரசும் தற்போது பள்ளிப் பாடத்திட்டத்தை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொள்வது பாராட்டுக்குரியது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையை படிப்படியாக தமிழகத்தில் செயல்படுத்திக் கொண்டிருக்கும் தமிழக அரசு, தாய்மொழியை அடிப்படையாகக் கொண்ட மும்மொழி கல்விக் கொள்கையையும் விரைவில் தமிழகத்தில் கொண்டு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications