நம்ப வைத்து கழுத்தறுத்ததே பாஜக..கதறலுடன் எடப்பாடியை சந்திக்கும் 'புதிய தமிழகம்' டாக்டர் கிருஷ்ணசாமி!
சென்னை: தென்காசி லோக்சபா தொகுதியில் 6 முறை போட்டியிட்டு 6 முறையும் தோல்வியை தழுவிய போதும் ஒருமுறையேனும் வென்றுவிடுவோம் என்ற நம்பிக்கையோடு பாஜக கூட்டணியில் காத்திருந்தார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. ஆனால் தென்காசி லோக்சபா தொகுதியை திடீரென தர மறுத்துவிட்டதால் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி அதிமுக அணிக்கு தாவ முடிவு செய்துள்ளாராம் டாக்டர் கிருஷ்ணசாமி.
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, பாஜக எனும் அரசியல் கட்சியை மட்டுமல்ல.. பாஜகவின் சித்தாந்தங்களை கூட முழுமையாக ஆதரித்து தீவிரமாக பேசி வந்தார். ஒரு ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதியைப் போல டாக்டர் கிருஷ்ணசாமி தமது கருத்துகளை அதிதீவிரமாகவே முன்வைத்தார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கைகளை அவ்வளவு இறுகப்பற்றியிருந்தார் டாக்டர்.
பாஜக- அதிமுக கூட்டணி முறிவின் போது ரொம்பவே ஆடிப் போனார் டாக்டர் கிருஷ்ணசாமி. பாஜக, அதிமுக இரு கட்சிகளின் தலைமை மனம் வருந்தாதபடிதான் டாக்டர் கிருஷ்ணசாமி கருத்துகளை முன்வைத்து வந்தார். ஆனாலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருந்து வந்தார் டாக்டர் கிருஷ்ணசாமி.

சேலம் விவசாயிகள் விவகாரம்: இந்நிலையில் சேலம் விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விவகாரத்தில் பாஜகவுக்கு எதிராக ஆவேசத்தை காட்டி இருந்தார் டாக்டர் கிருஷ்ணசாமி. பாஜகவுக்கு எதிரான டாக்டர் கிருஷ்ணசாமியின் இந்த ஆவேச அறிக்கை, பேட்டிகள் என்னாச்சு டாக்டருக்கு? என்கிற கேள்விகளையும் எழுப்பின. அப்போதுதான் தென்காசி லோக்சபா தொகுதியை பாஜக வைத்து கொள்ள விரும்புவதாகவும் தென்காசிக்கு பதில் வேறு ஒரு தொகுதியை தருவதாகவும் கூறியது; அதனை ஒருபோதும் ஏற்கவே முடியாது என டாக்டர் கிருஷ்ணசாமி திட்டவட்டமாக கூறிவிட்டார். இதன் வெளிப்பாடுதான் பாஜக மீதான கோபம் எனவும் கூறப்பட்டது.
ஒட்டப்பிடாரம்: டாக்டர் கிருஷ்ணசாமியின் தேர்தல் அரசியல் வரலாற்றில் பிரிக்க முடியாதவை ஒட்டபிடாரம் சட்டசபை தொகுதியும் தென்காசி லோக்சபா தொகுதியும். 1996, 2021, 2006, 2011, 2016,2021 ஆகிய சட்டசபை தேர்தல்களில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்டவர் டாக்டர் கிருஷ்ணசாமி. 1996-ல் ஜனதா கட்சி சின்னத்திலும் 2006-ல் பகுஜன் சமாஜ் கட்சி சின்னத்திலும் போட்டியிட்டார். இதில் 1996, 2011 தேர்தல்களில் மட்டும் வென்றார் டாக்டர் கிருஷ்ணசாமி. 2011 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று ஒட்டப்பிடாரத்தில் போட்டியிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி 56.41% வாக்குகளைப் பெற்றிருந்தார்.
தென்காசி லோக்சபா தொகுதி: 1998 முதல் ஒவ்வொரு லோக்சபா தேர்தலிலும் தென்காசி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வருகிறார் டாக்டர் கிருஷ்ணசாமி. 6 தேர்தல்களில் தென்காசி லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு 6 முறையும் தோல்வியைத் தழுவினார் டாக்டர் கிருஷ்ணசாமி. ஆனாலும் தென்காசி லோக்சபா தொகுதியில் தமக்கான கணிசமான வாக்கு வங்கியை தொடர்ந்து தக்க வைத்து வருகிறார் டாக்டர். 1998-ல் 19.15%, 1999-ல் 27.93%, 2004-ல் 14.20%, 2009-ல் 15.69% வாக்குகளைப் பெற்றார். 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 26.19% வாக்குகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறினார் டாக்டர் கிருஷ்ணசாமி. 2019 லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் களம் கண்ட டாக்டர் கிருஷ்ணசாமி, 33.67% வாக்குகள் பெற்று 2-வது இடத்தில் நின்றார்.
கழுத்தறுத்ததே பாஜக: இப்படி இடைவிடாமல் தென்காசி லோக்சபா தொகுதியில் களம் கண்டு ஒரு கை பார்க்கும் முடிவோடு இருந்த டாக்டர் கிருஷ்ணசாமிக்கு பாஜக, தொகுதியை தர முடியாது என கறாராக சொன்னதால் கடும் கோபமாம். கடைசி வரை நம்ப வைத்து இப்படி கழுத்தறுத்துவிட்டதே பாஜக என்கிற கோபத்தையும் குமுறலையும்தான் சேலம் விவசாயிகள் விவகாரத்தில் கொட்டி வெடித்தாராம் டாக்டர் கிருஷ்ணசாமி.
அதிமுக கூட்டணிக்கு போகும் டாக்டர்: தற்போதைய நிலையில் அதிமுக, திமுக கூட்டணிகள்தான் டாக்டர் கிருஷ்ணசாமிக்கான வாய்ப்பு. திமுக அணியில் ஏற்கனவே 'இட நெருக்கடி'. இருக்கிற கட்சிகளுக்கே 'கிள்ளி' தரும் நிலைமைதான். அதிமுக கூட்டணியோ சிவப்பு கம்பளம் விரித்து டாக்டர் கிருஷ்ணசாமியை வரவேற்கும். தென்காசி லோக்சபா தொகுதியையும் தாராளமாக தந்துவிடும். இந்த நம்பிக்கையில்தான் விரைவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுக கூட்டணியில் தமது இருப்பை உறுதி செய்வார் டாக்டர் கிருஷ்ணசாமி என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.
-
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
நள்ளிரவில் ‘செக்’ வைக்கும் காக்கிகள்.. சென்னையில் இரவு நேரத்தில் வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
இரட்டை இலை சின்னத்தில் ஆம்ஸ்ட்ராங் மனைவி போட்டி? எடப்பாடி போடும் அதிரடி பிளான்! -
தனித்தொகுதிகள்.. கோட்டையை இழந்த அதிமுக... களம் வென்ற திமுக! 2016 vs 2021 vs 2026 என்ன நடக்கும்? -
சுருண்டு விழுந்த சூரியன்! 91இல் வீசிய ‘ராஜீவ்’ அலை.. 2 வருடத்தில் ’நேஷனல் லீடர்’ ஆன ஜெயலலிதா -
கிராமங்கள் vs நகரங்கள்.. 2021 சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுகவின் செயல்பாடுகள் எப்படி?












Click it and Unblock the Notifications