பாஜகவின் கொங்கு மண்டல மெகா கணக்கு.. தேர்தல் பிளானோடு சிபிஆருக்கு பதவி! பயங்கர வியூகம்!
சென்னை: கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதி ஆக்குவதன் மூலம், கொங்கு மண்டலத்தில் அமோக ஆதரவு பெறும் மெகா பிளானில் முக்கிய நகர்வைச் செய்துள்ளது பாஜக. ஏற்கனவே கோவையில் 2 முறை எம்.பியாக இருந்த சிபி ராதாகிருஷ்ணனுக்கு டிக் அடித்து, செமத்தியான தேர்தல் வியூகம் அமைத்துள்ளது பாஜக.
கொங்கு பகுதிகளில் பாஜக வலுவாக இருக்கும் நிலையில், மீண்டும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தமிழருக்கு மிக முக்கியமான பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பது பாஜகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சட்டசபை தேர்தல் நெருக்கம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் முழுமையாக 7 மாதங்கள் மட்டுமே உள்ளன. ஏற்கனவே அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, தமிழக பாஜகவை வலுப்படுத்தும் நோக்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்ச்சியாக தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார். பிரதமர் மோடியும் தமிழ்நாட்டுக்கு வருகை தந்துகொண்டிருக்கிறார்.
ஏற்கனவே ஏப்ரல் மாதம் சென்னைக்கும், ஜூன் மாதம் மதுரைக்கும் வருகை தந்த அமித்ஷா, அடுத்ததாக ஆகஸ்ட் 22 ஆம் தேதி நெல்லைக்கு வருகை தரவுள்ளார். நெல்லையில் நடக்கவுள்ள பூத் கமிட்டி மாநாட்டில் அமித்ஷா பங்கேற்க இருக்கிறார். பிரதமர் மோடி கடந்த மாதம் தூத்துக்குடி மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு வந்த நிலையில், அடுத்ததாக திருவண்ணாமலை வரவுள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக மேலிடம் வியூகம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை பாஜக மேலிடம் மிக முக்கியமானதாக கருதுவது மேலிட தலைவர்களின் நடவடிக்கைகளின் மூலம் தெரிகிறது. இந்த நிலையில் குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்த நிலையில், பாஜக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூரைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன், தற்போது மகாராஷ்டிரா ஆளுநராக செயல்பட்டு வருகிறார். 1998 லோக்சபா தேர்தலில் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற சிபி ராதாகிருஷ்ணன், 1999 லோக்சபா தேர்தலில் மீண்டும் வென்று எம்.பி ஆனார். இந்த தொடர் வெற்றிகளின் காரணமாகவே கோவையில் பாஜக வலுப்பெற முடிந்தது.
கோவையில் பாஜக
தமிழ்நாட்டில் கோவையில் பாஜக தொடர்ந்து தமது வாக்கு வங்கியை நிரூபித்து வந்துள்ளது. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட சிபி ராதாகிருஷ்ணன் 3 லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் பெற்று 2ஆம் இடம் பிடித்தார். 2014 லோக்சபா தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் களமிறங்கிய நிலையில், 3.89 லட்சம் வாக்குகள் பெற்று திமுகவை முந்தி இரண்டாம் இடம் பிடித்தார் சிபி ராதாகிருஷ்ணன்.
2019 லோக்சபா தேர்தலில் 3,92,007 வாக்குகள் பெற்றார் சிபி ராதாகிருஷ்ணன். இது பதிவான மொத்த வாக்குகளில் 31%. கடந்த லோக்சபா தேர்தலில் கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்ட அண்ணாமலை, 2வது இடத்தை பிடித்தார். சுமார் 4.5 லட்சம் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தார் அண்ணாமலை. வாக்கு சதவீதம் 33%. அதிமுக வேட்பாளர் பெற்ற வாக்கு சதவீதம் 17%.
கொங்கு மண்டல வியூகம்
இந்த நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு 7 மாதங்கள் மட்டுமே உள்ள சூழலில், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தமிழருக்கு துணை ஜனாதிபதி பதவியை பாஜக வழங்க உள்ளது. இதன் மூலமாக பாஜகவின் வாக்குகளை முழுமையாக அறுவடை செய்ய முடியும் என எதிர்பார்க்கிறது பாஜக மேலிடம். தமிழ்நாட்டிற்கு பாஜக முக்கியத்துவம் அளித்திருக்கிறது என்பதைக் கொங்கு மண்டல மக்கள் மனதில் இடம்பெறச் செய்ய முடியும் என்று கருதுகிறது.
மேலும், சி.பி ராதாகிருஷ்ணன், கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மையாக உள்ள கொங்கு வேளாளக் கவுண்டர் சாதியைச் சேர்ந்தவர் என்பதும் பாஜகவுக்கு தேர்தல் களத்தில் பிளஸ்ஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் அதிமுக செல்வாக்கு செலுத்தி வரும் நிலையில், இந்த நகர்வுகளின் மூலம் மீண்டும் கொங்கு மண்டலத்தில் அதிமுக - பாஜக கூட்டணி மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications