அம்பாசமுத்திரத்திற்கு பஸ்சில் கூப்டு போனாங்க.. அப்போ என்ன நடந்தது தெரியுமா? அமர்பிரசாத் ரெட்டி பதில்
சென்னை: அம்பாசமுத்திரத்திற்கு என்னை பஸ்சில் கூப்பிட்டு போனாங்க, எந்த அளவுக்கு டார்ச்சர் பண்ண முடியுமோ அந்த அளவுக்கு பண்ணலாம் என்று ஆனால் அங்கு நடந்ததே வேறு என்று ஜாமீனில் வெளியே வந்த அமர்பிரசாத் ரெட்டி பேசியுள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு 50 அடி உயரத்தில் பாஜக கொடிக் கம்பத்தை அக்கட்சியினர் அமைத்தனர். உரிய அனுமதி இல்லாமல் அந்த கொடிக்கம்பம் அமைக்கப்பட்டதாக கூறி அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த அக்டோபர் 20ம் தேதி நள்ளிரவு பாஜகவினருக்கும், அப்பகுதி மக்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

இதையடுத்து விசாரித்த போலீசார் அங்கு கொடிக்கம்பம் இருக்கக்கூடாது என்று அகற்ற முயன்றனர். அப்போது, பாஜகவினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில், போலீசாரின் பொக்லைன் வாகன கண்ணாடி உள்ளிட்டவற்றை பாஜகவினர் அடித்து உடைத்தார்கள். இது தொடர்பான புகாரின் பேரில், பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட பாஜகவினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் 6 பேரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து, அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஜாமீனில் வெளியே வந்த பிறகு செய்தியாளர்களுகுக் பேட்டி அளித்த அமர் பிரசாத் ரெட்டி கூறியதாவது:-
அரசியலில் கொள்கையை கொள்கையால் தான் நீங்க எதிர்க்க வேண்டும். எனக்கு தெரிந்து பாதுகாப்பு இந்த அரசில் இல்லை என்று தெரிகிறது. ஆம்புலன்ஸ் மட்டும் வருகிறது. போகிறது. ஆனால் உள்ளே யாரும் இல்லை. பின்னர் கார் மட்டும் தனியாக போகிறது. அதிலே யாரோ போகிறார்கள். ஆனால் அது யார் என்று தெரியவில்லை. சிசிடிவி புட்டேஜை வெளியில் விடுவதற்கு தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபிக்கு தைரியம் இருக்கிறதா?
நான் கேள்வி கேட்கிறேன். ஒரு ஒரு இஞ்சிற்கு ஒரு சிசிடிவி கேமிரா வைத்திருக்கிறீர்கள் அல்லவா? சிசிடிவி புட்டேஜை வெளியிட முடியுமா? சட்ட அமைச்சரை சந்திப்பேன். தேசிய மனித உரிமை ஆணையத்தில் முறையிடுவேன்.. உள்ளே என்னென்ன நடக்கிறது என்று நினைத்துக்கொண்டு இருக்கீங்க.. உங்களால் டோப் டெஸ்ட் எடுக்க முடியுமா? சிறையில் உள்ள 2900 பேருக்கு டோப் டெஸ்க் எடுப்பார்களா?
ஏன் நான் கேட்கிறேன் என்றால் உள்ளே கஞ்சா சப்ளை நடக்கிறது. நீங்க டோப் டெஸ்ட் எடுங்க.. நானே பார்த்திருக்கேன். கோர்ட்டுக்கு சென்றுவிட்டு வரும் போது மறைத்து மறைத்து எடுத்து வருகிறார்கள். இதில் எப்படி என்னை பொய் வழக்கு போட்டு வெற்றி பெற முடியும். முதலில் தப்பு செய்தவர்களை திருத்துவதற்கு தான் சிறை. அங்கே போய் அவன் ரவுடியாக மாறுகிறான்.
அவனை போதைக்கு அடிமையாக்கி அவன் வாழ்க்கையையே வெறுத்து போற அளவிற்கு, சொந்த அம்மாவையே வெட்டிவிட்டு வந்தவர்களும் உள்ளே இருக்காங்க. ஒரு கவுன்சிலிங் கிடையாது. சிசிடிவி காட்சியை வெளியிட வேண்டும். செந்தில் பாலாஜிக்கு கிடைக்ககூடிய என்னென்ன வசதிகள் என்பதை நீங்களே தெரிந்துகொள்ளலாம்.
அம்பாசமுத்திரத்திற்கு என்னை பஸ்சில் கூப்பிட்டு போனாங்க.. இவுங்க என்ன நினைச்சாங்க என்றால் பஸ்சில் கூப்டு போனால் இவன் ரொம்ப கஷ்டப்படுவான்.. எந்த அளவுக்கு டார்ச்சர் பண்ண முடியுமோ அந்த அளவுக்கு பண்ணலாம் என்று... ஆனால் அவர்களுக்கு தெரியாது.. பாஜகவினர் ரொம்ப ஸ்மார்ட் என்று... லைவ் லொகேஷென் அனுப்பி ஒவ்வொரு பஸ் ஸ்டாப்பிலும் எனக்கு வரவேற்பு கொடுத்தார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications