“அண்ணாமலை வேண்டும்.. அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம்.. சாகும்வரை உண்ணாவிரதம்” பாஜக பரபரப்பு போஸ்டர்கள்!
சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். அண்ணாமலையே தமிழக பாஜக தலைவராக நீடிக்கவேண்டும் என வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளப்போவதாக பாஜகவினர் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.
தமிழ பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக வேறொருவர் நியமிக்கப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவி வருகிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவை நேரில் சந்தித்தார். அப்போது வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி குறித்து பேசப்பட்டதாகவும், அப்போது அண்ணாமலையை தமிழக பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்ற வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியானது.

இதனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விரைவில் மாற்றப்படுவார் எனக் கூறப்பட்டது. மேலும் அடுத்த பாஜக தலைவருகான ரேஸில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக பாஜக தலைவர் மாற்றம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றத்திற்கு கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்றும் பாஜக நிர்வாகிகள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

"தற்குறியுடன் கூட்டணி வேண்டாம்", "கூடா நட்பு கேடாய் முடியும்" என அதிமுகவை விமர்சிக்கும் வகையிலும் "வேண்டும் மீண்டும் அண்ணாமலை" என அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்தும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டி விருதுநகரில் ஒட்டப்பட்டுள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், வாசகங்கள் அடங்கிய போஸ்டரை பாஜக விருதுநகர் மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவர் சிபிச்சக்கரவர்த்தி என்பவர் ஒட்டியுள்ளார். அந்த போஸ்டரில் "தற்குறியுடன் கூட்டணி வேண்டாம்" "கூடா நட்பு கேடாய் முடியும்" "வேண்டும் மீண்டும் அண்ணாமலை" என்ற வாசகங்கள் மற்றும் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரின் புகைப்படங்களுடன் ஒட்டப்பட்டுள்ளன.

தஞ்சை மாவட்டம் முழுவதும் "வேண்டும் வேண்டும்.. அண்ணாமலை வேண்டும்.. வேண்டாம் வேண்டாம் அதிமுக கூட்டணி வேண்டாம்! அண்ணாமலையை தமிழக பாஜக தலைவராக நீட்டிக்க வலியுறுத்தி 100க்கும் மேற்பட்டோர் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
-
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
என் பெயரை பயன்படுத்த கூடாது.. பதவிக்கு 'மூச்'.. அண்ணாமலை முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலையிடம் கேளுங்கள்.. தாமரையில் ஒரு இதழை கூட அசைக்க முடியாது..தமிழிசை சௌந்திரராஜன் -
"தமிழகத்தில் அண்ணாமலைக்கும் மன்சூர் அலிகானுக்கும் தான் போட்டி!" நக்கலடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா












Click it and Unblock the Notifications