ஏன் இந்த கொலவெறி? அண்ணாமலை கூட்டத்தில் மோடிக்கு எதிரான மகஇக கோவன் பாடல்-டென்ஷனான பாஜக நிர்வாகிகள்!
சென்னை: சென்னை அருகே மாதவரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு எதிரான, மக்கள் கலை இலக்கிய கழகத்தின் கோவன் பாடிய பாடல் ஒலிக்கப்பட்டது பெரும் சர்ச்சையாகிப் போனது.
சென்னை அருகே மாதவரத்தில் சில நாட்களுக்கு முன்னர் தாமரை கிளினிக் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மெர்சலான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகத்தின் வருங்காலமே! வருங்கால முதல்வரே! தமிழகத்தின் நாளைய சரித்திரமே! என்றெல்லாம் அமர்க்களப்படுத்தி இருந்தனர்.

உற்சாக வரவேற்பு
அண்ணாமலையை வரவேற்க பல மணிநேரம் தாமரை மலர்களுடன் பெண்கள் காத்திருந்தனர். தாமரை மலர்கள் வாடிப் போகும் நிலையில் தாமதமாக வந்தாலும் அண்ணாமலையே இன்ப அதிர்ச்சியில் மூழ்கும் அளவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவ்வளவு நேரமும் பெண்கள் காத்திருந்தனர்.

திடீரென ஒலித்த பாடல்
இப்படி எல்லாமே நல்லபடியாக போய்க் கொண்டிருந்த நிலையில் யாருமே எதிர்பார்க்காத ஒரு பாடல் அந்த நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது. மோடி சொன்ன 15 லட்சம் அக்கவுண்டுல ஏறிடுச்சு.. அதுக்கு பரிசா 2 கோடி பேருக்கு வேலை கிடைச்சாச்சு என்ற பாடல்தான் அது. இந்த பாடலை கேட்ட பாஜக நிர்வாகிகள் ஒரு நிமிடம் அதிர்ச்சியாகிப் போகினர்.

கொந்தளித்த பாஜக
இந்தப் பாடல் , பாஜகவுக்கு எதிரானதா? அல்லது ஆதரவானதா? என தெரியாமல் குழப்பம் நிலவியது. பின்னர்தான் அது மக்கள் கலை இலக்கிய கழகத்தின் கோவன், பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக பாடிய பாடல் என்பது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த பாஜக நிர்வாகிகள், மைக் செட் போட்டுக் கொண்டிருந்த இளைஞரிடம் மல்லுக் கட்டினர்.

கம்யூனிஸ்ட்டா? விசிகவா?
அத்துடன், நீ என்ன கம்யூனிஸ்ட்டா? விசிகவா? இந்தப் பாட்டை எப்படி போடலாம்? என்றெல்லாம் எகிறினர். அதுவரை பொறுமையாக இருந்த மைக்செட் இளைஞர், பதிலுக்கு ஆவேசப்பட்டார்.. அவரும் சரிக்கு சரியாக பாஜகவினருடன் வாதம் செய்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. பின்னர் கோவனின் மோடி எதிர்ப்பு பாடல் நிறுத்தப்பட்டது. இதனால் சலசலப்பும் முடிவுக்கு வந்தது. இதன்பின்னரே பாஜக நிர்வாகிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பின்னர் தாமரை கிளினிக் திறப்பு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக?












Click it and Unblock the Notifications