முடிசூடா மன்னனா? எங்களால தான் கொஞ்ச ஓட்டும்..சுத்தமா அவுட் ஆகியிருப்பாரு டி.ஜெ.! பால் கனகராஜ் பளிச்!
சென்னை: பாஜக கூட்டணியால் தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை இழந்ததோடு, 25 ஆண்டுகளாக அசைக்க முடியாமல் இருந்த ராயபுரம் தொகுதியில் தான் தோற்றதாக ஜெயக்குமார் கூறிய கருத்துக்கு பாஜக வேட்பாளர் பால்கனகராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் அதிமுக ஆட்சியே பறிபோனது. ராயபுரத்தில் நான் தோற்கிற ஆளா என்ன? 25 வருடங்கள் முடிசூடா மன்னனாக ராயபுரம் பகுதியில் இருந்தேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக பாஜகவை விமர்சித்தார்.

இதற்கு தமிழக பாஜக தரப்பில் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் அதிமுக-பாஜக இடையேயான மோதல் வலுப்பெற்றுள்ளது. அண்ணாமலை பொதுக் கூட்டங்களில் அதிமுக குறித்து பேசியதற்கான எதிர்வினை ஆற்றத் தொடங்கியுள்ளனர் அதிமுகவினர்.
பாஜக கூட்டணி: இந்நிலையில் பாஜக கூட்டணியால் தான் ஆட்சி போனதாகவும், அசைக்க முடியாத தானே ராயபுரத்தில் தோற்றதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர்," பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் அதிமுக ஆட்சியே பறிபோனது. ராயபுரத்தில் நான் தோற்கிற ஆளா என்ன? 25 வருடங்கள் முடிசூடா மன்னனாக ராயபுரம் பகுதியில் இருந்தேன்.. தோல்வி என்பதையே நான் அறியவில்லை. பாஜகவால்தான் நான் தோல்வியடைந்தேன்.
ஜெயக்குமார்: பாஜக இல்லையெனில் நான் சட்டமன்றத்திற்கு சென்றிருப்பேன்.பாஜக எங்கள் கூட்டணியில் இருந்ததால் ராயபுரத்தில் உள்ள 40,000 கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் என சிறுபான்மையின மக்கள் எனக்கு எதிராக வாக்களித்தனர். அவர்களுக்கு என் மீதான கோபம் கிடையாது. பாஜக மீது தான் கோபம். பாஜகவை கழட்டிவிட்டு வாருங்கள் உங்களுக்கு ஓட்டு போடுகிறோம் என்று சொன்னார்கள்.
5 முறை வெற்றி: அவர்களிடம் பாஜக வேஸ்ட் லக்கேஜ் தான். என்ன செய்ய.. சமயம் வரும்போது கழட்டி விட்டுவிடுவோம் என்று சொன்னேன். அதேபோல நேரம் வந்தது பாஜகவை கழட்டிவிட்டுவிட்டோம். பாஜக இல்லை என்றால் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இருப்பேன். ஒட்டுமொத்தமாக 2019 மற்றும் 2021 தேர்தல்களில் நாங்கள் பாஜகவால் மட்டுமே தோல்வி அடைந்தோம்." என பேசினார்.
பால் கனகராஜ்: 1991 முதல் ராயபுரம் தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்த ஜெயக்குமார் 2021 தேர்தலில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜெயக்குமார் கூறிய கருத்துக்கு பாஜக வேட்பாளர் பால்கனகராஜ் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,"கடந்த தேர்தலில் பா.ஜ.க-வால்தான் கொஞ்ச ஓட்டாவது ஜெயக்குமார் வாங்குனாரு, இல்லைனா சுத்தமா அவுட் ஆகியிருப்பாரு" என மிகக் கடுமையாக பதிளித்துள்ளார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications