நீலகிரியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டி- திமுகவின் ஆ.ராசாவுக்கு எதிராக பாஜக அதிரடி!
சென்னை: நீலகிரி லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளராக 2-வது முறை ராஜ்யசபா எம்பியாக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் 3-வது வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர்கள்:
கோவை- அண்ணாமலை
நீலகிரி- எல்.முருகன்
தென் சென்னை: தமிழிசை சவுந்தரராஜன்
கன்னியாகுமரி- பொன்.ராதாகிருஷ்ணன்
நெல்லை- நயினார் நாகேந்திரன்
வேலூர்- ஏ.சி.சண்முகம்
பெரம்பலூர்- பாரிவேந்தர்
மத்திய சென்னை- வினோஜ் பி.செல்வம்
நீலகிரியில் எல்.முருகன்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நீலகிரி லோக்சபா தொகுதியில்தான் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. பாஜகவும் இதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தது. அண்மையில்தான் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து 2-வது முறையாக ராஜ்யசபா எம்பியாக எல்.முருகன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் நீலகிரி லோக்சபா தொகுதியில் எல்.முருகன் போட்டியிடமாட்டார் எனவும் கூறப்பட்டது.
ஆனால் திடீரென புதிய திருப்பமாக நீலகிரி லோக்சபா தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி லோக்சபா தொகுதி வேட்பாளர்கள்
திமுக- ஆ.ராசா
அதிமுக- லோகேஷ் தமிழ்ச்செல்வன்
பாஜக- எல்.முருகன்
நீலகிரி தொகுதியில் அதிக முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. திமுக 3 முறையும் பாஜக, அதிமுக தலா 2 முறையும் வென்றுள்ளன.
எல்.முருகன்: தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் 2021 சட்டசபை தேர்தலில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இதனையடுத்து மத்திய இணை அமைச்சராக்கப்பட்டார். மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து 2 முறை ராஜ்யசபா எம்பியாக்கப்பட்டவர் எல்.முருகன். முன்னதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராகவும் பதவி வகித்தவர் எல்.முருகன்
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் நீலகிரி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா 5,47,832 வாக்குகள் பெற்றார். அதிமுகவின் தியாகராஜன் 3,42,009, மநீமவின் ராஜேந்திரன் 41,169, அமமுகவின் ராமசாமி 40,419 வாக்குகளைப் பெற்றிருந்தனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications