மோடி வரும் அதே நாளில்.. பிளான் போடும் பாஜக தலைவர்கள்.. கூட்டணி வியூகம் தொடர்பாக முக்கிய முடிவு!
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மார்ச் 4ஆம் தேதி பாஜக மாநில மையக் குழு கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி சென்னை வரும் நாளன்றே இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக மாநில மையக் குழு கூட்டம் நாளை மறுநாள் (மார்ச் 4) நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் லோக்சபா தேர்தல் கூட்டணி வியூகம், தேர்தல் அறிக்கை உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக எம்.எல்.ஏக்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தேசிய செயற்குழு உறுப்பினர்களான ஹெச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி அன்றைய தினம் சென்னைக்கு வர இருக்கிறார். பிரதமர் மோடி கடந்த 27, 28-ம் தேதிகளில் 2 நாள் பயணமாக தமிழகம் வந்தார். அரசு நிகழ்ச்சிகள், பாஜக பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். இந்நிலையில் மார்ச் 4ஆம் தேதி மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். மார்ச் 4ஆம் தேதி சென்னையில் நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார் பிரதமர் மோடி.
சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களையும் பங்கேற்க வைக்க தமிழக பாஜக திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே பல்லடம் கூட்டத்தில் ஜிகே வாசன், ஏசி சண்முகம், தேவநாதன், ஜான் பாண்டியன், பாரிவேந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் ஆகியோரை பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாஜகவுடன் கூட்டணி என ஓபிஎஸ்ஸும் உறுதி செய்துள்ளார்.
ஓபிஎஸ் மற்றும் தினகரன் உடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற உள்ளதாகத் தெரிகிறது. இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் பாஜக தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது 4 லோக்சபா தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா இடங்களை ஜிகே வாசன் கேட்டதாக கூறப்படுகிறது.
வரும் நாட்களில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரிகிறது. பாரிவேந்தர், ஏசி சண்முகம், தமிழருவி மணியன், தேவநாதன், ஜான் பாண்டியன் ஆகியோருக்கு தலா ஒரு தொகுதியை பாஜக ஒதுக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பரபரப்பான கூட்டணி பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பாஜகவின் மாநில மையக்குழு கூட்டம் நடைபெற இருப்பதால், பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளை கூட்டணியில் சேர்க்க பாஜக முயன்ற நிலையில், அந்த இரண்டு கட்சிகளுமே அதிமுக கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றன. இதனால், பாஜகவின் அடுத்த கட்ட முயற்சி என்பதும் மார்ச் 4ஆம் தேதிக்குப் பிறகு தெரியும்.
மோடி உரையாற்றும் வகையில் தமிழகத்தில் அடுத்தடுத்து பல இடங்களில் பொதுக் கூட்டங்களை நடத்தவும் தமிழக பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராமநாதபுரம், கோவை, கன்னியாகுமரி, உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் மோடி பங்கேற்பார் எனக் கூறப்படுகிறது. பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடத்துவது தொடர்பாகவும் மையக்குழு ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது.
-
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்! -
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications