எனக்கு டெல்லி ஒரு அசைன்மென்ட் தந்திருக்கு.. ரிட்டர்ன் ஆகும் அண்ணாமலை! தமிழக அரசியலில் புது திருப்பம்
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை லண்டனில் இருந்து அடுத்த வாரம் சென்னை திரும்புகிறார். அதாவது, செப்டம்பர் 23-ந்தேதி சென்னை திரும்புவார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
சென்னை திரும்பியதும் கட்சியில் சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்கவிருக்கிறாராம். குறிப்பாக, கடந்த 2 ஆண்டுகளில், கட்சி பணிகளில் சரிவர செயல்படாத நிர்வாகிகளுக்கு மீண்டும் எந்த ஒரு பதவியும் வழங்காமல் கட்டம் கட்டப்போகிறாராம். மாவட்ட தலைவர்களில் 70 சதவீதம் தனது ஆதரவாளர்களை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளார் என்றும், இதற்கு கட்சியின் தேசிய தலைமையிடம் அனுமதி பெற்றுவிட்டார் என்றும் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே, அவரது வருகை குறித்து அண்ணாமலையிடம் சில முக்கிய நிர்வாகிகள் சமீபத்தில் பேசியிருக்கிறார்கள். அப்போது, 'நீங்கள் சென்னை திரும்பியதும் மாநில நிர்வாகிகளில் மாற்றம் இருக்கும் ; தலைவர் பதவியும் மாற்றப்படவிருக்கிறது என இங்கு ஒரே பேச்சாக இருக்கு'' என்று கேட்டுள்ளனர்.
அதற்கு, சிரிப்பை பதிலாகத்தந்த அண்ணாமலை, ''என்னை மாத்தறதுக்கு டெல்லி வரை போய் சிலர் முயற்சித்த விவகாரம் எனக்குத்தெரியும். அதெல்லாம் பழைய கதை. கட்சித் தலைமை எனக்கு சில அசைன்மெண்ட்டுகளை கொடுத்திருக்கிறது. அது, 2026 தேர்தலை மையப்படுத்தியது. அப்போ கூட்டி கழிச்சிப் பாருங்க ; தலைவர் பதவி மாறுமா? மாறாதா? '' என்று சொல்லி சிரித்திருக்கிறார். அவரிடம் பேசிய நிர்வாகிகள், அதில் தெரிந்த உண்மையை புரிந்து நிம்மதி அடைந்துள்ளனராம். காரணம், தலைவர் பதவி மாற்றம் உறுதி என தெரிந்தால், புதிய தலைவர் யார் என தெரிந்து அவரது பின்னால் இப்போதே சென்று துண்டு போட்டு வைத்துக்கொள்வோம் என்று நிர்வாகிகள் திட்டமிட்டிருந்துள்ளனர். அதனால்தான், மாற்றம் இருக்குமா ? இருக்காதா? என அண்ணாமலையிடமே கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கிறார்கள் என்கிறது கமலாலய வட்டாரம்.
கட்சி கண்ட்ரோல்: ஒரு பக்கம் அதிமுக-பாஜக கூட்டணியை மீண்டும் உருவாக்கி விட வேண்டும் என்கிற பகீரத முயற்சியை எடுத்து வருகிறார் த.மா.க.தலைவர் ஜி.கே.வாசன். இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இரண்டு முறை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார்.
அந்த பேச்சுவார்த்தையில், ''நீங்கள் முயற்சி எடுங்கள். அதிமுக ஓ.கே. எனில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை'' என்ற ரீதியில் வாசனிடம் அமித் ஷா சொல்லியிருக்கிறார். அப்போது, அண்ணாமலையின் எடப்பாடி எதிர்ப்புதான் பாஜகவுடனான அதிமுக கூட்டணிக்கு நெருடலாக இருக்கிறது என்பதை வாசன் சொன்ன போதும், ''அப்படிப்பட்ட யோசனை தவறானது. கூட்டணி என்பது தேசிய தலைமை முடிவு செய்வது. இதில் மாநில தலைவரின் (அண்ணாமலை) முடிவு என்று எதுவும் கிடையாது. தலைவர்ங்கிற முறையில் அவரது யோசனை மட்டுமே கேட்கப்படும்.
மற்றபடி தேசிய தலைமையின் முடிவு தான் இறுதியானது. அதனால், மாநில தலைவரின் எதிர்ப்பினை வைத்து அதிமுக யோசிக்கக் கூடாது'' என்று அமித்ஷா சொல்லியிருக்கிறார். இந்த நிலையில், அமித்ஷாவுடனான சந்திப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய வாசன், எடப்பாடியை தொடர்புகொள்ள, பெரிய அளவில் அவர் ரியாக்ஷன் காட்டவில்லை.
இதனால் வாசனின் முயற்சி சற்று அமுங்கிப் போனது. இதனால் அண்ணாமலை திரும்பி வந்ததும் கட்சி முழுக்க அவரின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications