சசிகலா + எடப்பாடி.. கிளியர் சிக்னல் தந்த காவி.. எங்கே போவீங்க? பட்டென கேட்ட அண்ணாமலை! கவனிச்சீங்களா?
சென்னை: அதிமுகவின் டாப் தலைகளுக்கு எதிராக வந்து இருக்கும் இரண்டு முக்கியமான அறிக்கைகள் குறித்தும் பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இந்த அறிக்கைகள் குறித்து அவர் எழுப்பி உள்ள சந்தேகங்கள் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த செவ்வாய் கிழமை தமிழ்நாடு சட்டசபையில் இரண்டு முக்கியமான அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. 2018ம் ஆண்டு இந்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது.
இந்த சம்பவத்தில் 13 பேர் கொலை செய்யப்பட்டனர். போராட்டம் செய்து கொண்டு இருந்த மக்கள் மீது போலீசார் நடத்திய கண் மூடித்தனமான தாக்குதலில் 13 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அருணா ஜெகதீசன்
அதில், பொதுமக்களை போல துப்பாக்கிச் சூட்டை ஊடகங்களில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என எடப்பாடி பழனிசாமி கூறியது தவறு. அவர் அப்போது, அப்போதைய தலைமை செயலர் கிரிஜா, டிஜிபி ராஜேந்திரன் , IG Intelligence சத்யமூர்த்தி, ஆகியோர் மூலம் தூத்துக்குடி நிலவரங்கள் குறித்து எல்லா விதமான விபரங்களையும் எடப்பாடி பழனிசாமிக்கு நிமிடத்திற்கு ஒருமுறை தொடர்ந்து பெற்றார். அதனால் துப்பாக்கிச் சூட்டை ஊடகங்களில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என எடப்பாடி பழனிசாமி கூறியது தவறு, என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறுமுகசாமி
இது போக இன்னொரு பக்கம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் நடத்தி வந்த விசாரணையிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதில் சசிகலா. கேஎஸ் சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர்,விஜயபாஸ்கர். அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேரை குற்றம் செய்தவர்களாக கருதி விசாரிக்க வேண்டும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. சசிகலா மீது இந்த ஆணையம் நேரடியாக குற்றச்சாட்டுகளை வைத்து உள்ளது.

அறிக்கை
இந்த இரண்டு அறிக்கைகளும் தமிழ்நாடு அரசியல் உலகில் மிகப்பெரிய அளவிலான விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமி, இன்னொரு பக்கம் சசிகலா இரண்டு பேருமே இந்த இரண்டு அறிக்கைகள் காரணமாக கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். இந்த நிலையில்தான் பாஜக இந்த விஷயத்தில் முதல்முறையாக தனது கருத்தை தெரிவித்து உள்ளது. இந்த அறிக்கை தொடர்பாக பாஜக மௌனம் காத்து வந்த நிலையில்தான் அண்ணாமலை அதை பற்றி வெளிப்படையாக பேசி உள்ளார்.

அருணா ஜெகதீசன்
அருணா ஜெகதீசன் ஆணையம் பற்றி பேசி உள்ள அண்ணாமலை, அருணா ஜெகதீசன் அறிக்கையை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. கடைநிலையில் உள்ள போலீஸ் துப்பாக்கியால் சுட்டதற்காக உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது சரியில்லை. மேலே மேலே நடவடிக்கை எடுத்துக்கொண்டே செல்வேன் என்றால் எங்கே போவீர்கள். தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும். ஆனால் அதற்காக செயின் ஆப் ஆர்டரில் உள்ளவர்களை எல்லோர் மீதும் புகார் வைக்க கூடாது.

கடைநிலை
கடைநிலையில் உள்ள போலீஸ் துப்பாக்கியால் சுட்டதற்காக அவர்களுக்கு மேலே உள்ளவர்கள் எல்லோரும் மீது நடவடிக்கை எடுக்க கூடாது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொலைகாட்சியில் பார்த்து தெரிந்து கொண்டதாக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியது சரிதான். அவர் சொன்னதிலும் தவறு இல்லை, என்று அண்ணாமலை ஆதரவாக பேசி உள்ளார். இது போக ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தொடர்பாகவும் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.

ஏற்க மாட்டோம்
அதில், இந்த அறிக்கையை நாங்கள் ஏற்க மாட்டோம். இந்த விவகாரத்தில் ஏற்கனவே எய்ம்ஸ் குழு திருப்தி இருப்பதாக கூறியுள்ளது. ஆனால் இந்த அறிக்கையில் அதை மறுக்கும் அளவிற்கு மிகப்பெரிய ஆதாரம் எதுவும் இல்லை. பொத்தாம் பொதுவாக அவர்கள் பேசுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. அதிகாரிகளை இதில் இழுக்காதீர்கள். ஆறுமுகசாமி ஆணையத்தில் எதுவும் அறிவியல்பூர்வமாக இல்லை.எய்ம்ஸ் சிகிச்சை முறை சரிதான் என்று சொல்லும் போது, எப்படி அதை ஆறுமுகசாமி நிராகரிக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது, என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி
மொத்தத்தில் எடப்பாடிக்கு எதிராக இருக்கும் அருணா ஜெகதீசன் அறிக்கை, சசிகலாவிற்கு எதிராக இருக்கும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை இரண்டையும் ஒன்றாக பாஜக நிராகரித்து உள்ளது. அண்ணாமலை இரண்டையும் நிராகரிப்பதாக கூறி உள்ளார். அதிமுகவை இந்த விவகாரம் ஆட்டிப்படைத்து உள்ள நிலையில், இதில் பாஜக உங்களுடன் நிற்கிறது என்பதை உணர்த்தும் வகையில் அவரின் பேச்சு அமைந்துள்ளது. அண்ணாமலையின் இந்த பேச்சு இதன் காரணமாக விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications