NDA வேட்பாளர்களுக்காக வரிந்து கட்டி களமிறங்கிய முதலமைச்சர்கள்.. திமுக கூட்டணியில் மேஜர் மிஸ்ஸிங்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரக் களத்தில் வெளி மாநில முதலமைச்சர்கள் பலர் தென்பட்டனர். முக்கியமாக, பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் பலர் என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர். அதேசமயம், திமுக கூட்டணிக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில முதலமைச்சர்கள் கூட வரவில்லை.
தமிழக சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 23 ஆம் தேதி) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தலையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டனர். தமிழகத்தில் 4 முனை போட்டி நிலவும் சூழலில் பிரச்சாரக் களத்தில் அனல் பறந்தது. இந்நிலையில் இன்று மாலையுடன் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது.

தமிழகத்தில் இதுவரை எந்த சட்டசபை தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் மற்ற மாநில முதல்வர்கள் அதிகளவில் வந்து இங்கு பிரச்சாரம் செய்துள்ளனர். என்.டி.ஏ கூட்டணிக்கு தான் இந்தியாவில் அதிக முதலமைச்சர்கள் இருக்கின்றனர். என்.டி.ஏ கூட்டணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் முக்கிய கட்சி திமுக. எனவே, திமுகவுக்கு எதிராக பிரசாரம் செய்யவும், என்.டி.ஏ கூட்டணிக்கு ஆதரவாக ஓட்டுகளை பெறவும் தமிழகத்தில் பல மாநில முதலமைச்சர்களை தீவிர பிரச்சாரக் களத்தில் இறக்கியது பாஜக.
அதிமுக - பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள மத்திய பிரதேச மாநில முதல்வர் மோகன் யாதவ், மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, டெல்லி முதல்வர் ரேகா குப்தா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு என 6 மாநில முதல்வர்கள் தமிழ்நாட்டுக்கு வருகை வந்தனர். இவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தனர்.
அதேசமயம், திமுக கூட்டணிக்கு வெளி மாநில முதலமைச்சர்கள் யாரும் வாக்கு சேகரிக்க வருகை தரவில்லை. திமுக கூட்டணிக்கு வாக்கு சேகரிக்க வெளி மாநில முன்னாள் முதலமைச்சர், துணை முதல்வர், முன்னாள் துணை முதல்வர் ஆகியோர் வருகை தந்தனர். திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மட்டுமே பிரசாரம் செய்தனர்.
தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளாவின் முதலமைச்சரான பினராயி விஜயன், கர்நாடகா முதலமைச்சரான காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா, தெலுங்கானா முதல்வரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரேவந்த் ரெட்டி போன்ற தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வரவில்லை. காங்கிரஸ் கட்சி 3 மாநிலங்களில் ஆளும் நிலையில், 3 முதல்வர்களுமே இங்கு பிரச்சாரம் செய்ய வரவில்லை.
-
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications