முதல்வர் கான்வாய் வாகன புட்போர்டில் தொங்கிய மாநகராட்சி கமிஷனர் ககன் தீப்சிங் பேடி- பாஜக விமர்சனம்!
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் கான்வாய் வாகனத்தில் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன் தீப்சிங் பேடி தொங்கியபடி சென்றதை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
வங்க கடலில் உருவாகி மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் கரையை கடந்தது. மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட தென்சென்னை பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். தென்சென்னையில் கொட்டிவாக்கம், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், பனையூர் பகுதிகளில் முதல்வர் ஆய்வு செய்தார்.

முதல்வர் ஆய்வு
இதனைத் தொடர்ந்து சென்னை காசிமேட்டில் புயல் பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் மீனவர்களை சந்தித்தும் முதல்வர் ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார். சென்னை காசிமேடு பகுதியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்த போது முதல்வரின் கான்வாயில் சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி புட்போர்டில் தொங்கியபடி சென்றனர்.

கான்வாயில் புட்போர்டு பயணம்
சென்னை மேயராக மக்கள் பணியில் தம்மை முழுமையாக மேயர் பிரியா ஈடுபடுத்திக் கொள்வதை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். ஆனால் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர். இந்த நிலையில் மேயர் பிரியாவுடன் கமிஷனர் ககன் தீப்சிங் பேடி புட்போர்டில் தொங்கியபடி சென்றதை பாஜக விமர்சித்துள்ளது.

பாஜக விமர்சனம்
தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி இது தொடர்பாக சமூக வலைதளங்களில் விமர்சித்திருப்பதாவது: காசிமேட்டில் புயல் நிலவரங்களை பார்வையிட சென்ற முதல்வரின் வாகனத்தின் பின்னால் சென்ற வாகனத்தில் தொங்கியபடி சென்னை மாநகர மேயரும், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி அவர்களும் சென்ற காட்சி அதிர்ச்சியளிக்கிறது. ஒரு அரசியல்வாதியாக மேயர் பிரியா வாகனத்தில் தொங்கி கொண்டு சென்றதை கூட நம்மால் கடந்து சென்று விட முடியும்.

முதல்வர் கண்டிக்கனுமே..
ஆனால் மிக மூத்த இந்திய ஆட்சி பணி அதிகாரி (IAS) ஒருவர் வாகனத்தில் தொங்கியபடி சென்றுள்ளது அவரின் அந்தஸ்துக்கு, பணியின் கௌரவத்திற்கு உகந்ததல்ல. என்றே நான் கருதுகிறேன். முதலமைச்சரின் வாகனத்திலோ, தன் வாகனத்திலோ அவர் சென்றிருக்க வேண்டும். முதலமைச்சருக்கு தெரிந்து இந்த நிகழ்வு நடந்திருக்குமானால் துரதிர்ஷ்டவசமானது. தெரியாமல் நடந்திருந்தால் முதலமைச்சர் கண்டிக்க வேண்டிய நிகழ்வு இது. இவ்வாறு நாராயணன் திருப்பதி பதிவிட்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications