கேரளா கம்யூனிஸ்ட் அரசுதான் கோமியம், சாணத்தில் 'பஞ்சகவ்ய க்ரிதம்' மருந்து தயாரிக்கிறது.. பாஜக பதிலடி!
சென்னை: கோமியம் தொடர்பான சென்னை ஐஐடி (மெட்ராஸ் ஐஐடி) இயக்குநர் காமகோடி தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. இந்த நிலையில் கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசும்தான் கோமியம், சாணத்தில் பஞ்சகவ்ய க்ரிதம் என்ற மருந்தை தயாரிக்கிறது; கேரளா அரசின் 'ஒளஷதி' என்ற நிறுவனம்தான் இம்மருந்தை தயாரிக்கிறது; அப்படியானால் கேரள கோமியம் சிறந்தது, தமிழக கோமியம் தீமையானதா? என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக நாராயணன் திருப்பதி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: கோமியம்' குறித்து ஐ ஐ டி இயக்குனரின் கருத்துக்கு பொங்கு பொங்கு என்று பொங்கி கொண்டிருக்கிறார்கள் கம்யூனிஸ்டுகள். அய்யோ, அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை பரப்புகிறார் என்று விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்து கொண்டிருக்கிறார்கள்.

கேரளாவில், அரசுக்கு சொந்தமான 'ஒளஷதி' என்ற மருந்து தயாரிக்கும் நிறுவனம் மாட்டு சிறுநீர் மற்றும் சாணத்தில் தயாரிக்கப்பட்ட 'பஞ்சகவ்ய க்ரிதம்' என்ற மருந்தை தயாரிக்கிறது. இந்த மருந்தானது, மன நோய், மஞ்சள் காமாலை, காய்ச்சல், வலிப்பு நோய் உள்ளிட்டவைகளை குணமாக்குவதோடு, ஞாபக சக்தியை அதிகரிக்கும் அருமருந்து என்று கூறுகிறது.
மேலும் இதே கேரளா கம்யூனிஸ்ட் அரசு தான் இந்திய மருத்துவ ஆய்வு ஆணையத்திடம், கொரோனா சிகிச்சைக்கு மாட்டு சிறுநீரை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
மாட்டு சிறுநீர் மற்றும் சாணத்தின் மூலம் தயாரிக்கும் மருந்துகளை விற்பதன் மூலம் கோடிக்கணக்கில் லாபமீட்டுகிறது கேரள கம்யூனிஸ்ட் அரசு என்ற நிலையில், ஐ ஐ டி இயக்குனர் கூறியதை அரசியலாக்கிக் கொண்டிருப்பது அருவருக்கத்தக்கது.
ஒரு வேளை, கேரள கோமியம் சிறந்தது, தமிழக கோமியம் தீமையானது என்கிறார்களோ கம்யூனிஸ்டுகள்? இவ்வாறு தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறியதுதான் என்ன?
சென்னையில் கடந்த ஜனவரி 15 அன்று மாம்பலம் கோசாலையில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பங்கேற்றார். அப்போது கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்ட ஒரு துறவி, கோமியம் எனப்படும் பசுவின் சிறுநீர் அருந்திய பதினைந்து நிமிடங்களில் அவரது உடல்நலம் தேறியதாகக் கூறி, பசுவின் சிறுநீரில் மருத்துவக் குணங்கள் உள்ளன, அது பாக்டீரியாக்களை அழிக்கும், பூஞ்சைகளை ஒழிக்கும், செரிமானத்தை மேம்படுத்தும் என கூறியிருந்தார். இதுதான் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது.
-
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக!












Click it and Unblock the Notifications