4 கட்ட தேர்தலில் வெறும் 79 இடங்கள்தான்! பாஜகவிற்கு போன உளவுத்துறை ரிப்போர்ட்? சொன்னது யார் பாருங்க
சென்னை: மக்களவைக்கு இதுவரை நடந்து முடிந்த 4 கட்ட தேர்தல்களிலும் சேர்த்து பாஜகவால் 79 தொகுதிகளை கூட பெற முடியாது என உளவுத்துறை தெரிவித்துள்ளது என்று முக்கியமான தலைவர் ஒருவர் பேட்டி அளித்துள்ளார். என்ன நடக்குது? பாஜகவிற்கு உளவுத்துறை ரிப்போர்ட் போனதா?
நாடு முழுக்க 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் மூன்று கட்டத் தேர்தலில் முறையே 66.1, 66.7 மற்றும் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2019 தேர்தலை விட இதுவரை வாக்குப்பதிவு குறைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் 4ம் கட்ட தேர்தல் 9 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் நடக்கிறது. ஆந்திரப் பிரதேசத்தில் 25 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில் 67.25 சதவிகித வாக்குகள் பதிவானது.

5ம் கட்ட தேர்தல்: 2024 மக்களவைத் தேர்தலின் முதல் நான்கு கட்டங்கள் முடிவடைந்த நிலையில், நாடு இப்போது ஐந்தாவது கட்ட பொதுத் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. நடந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு மே 20ஆம் தேதி 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடைபெறுகிறது.
பீகாரில் 5, ஜம்மு காஷ்மீரில் 1, ஜார்க்கண்டில் 3, லடாக்கில் 1, மகாராஷ்டிராவில் 13, ஒடிசாவில் 5, உத்தரப் பிரதேசத்தில் 14, மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகளுக்கு 5ம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த கட்டத்தில் பார்க்க வேண்டிய இடங்கள் உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதி, ரேபரேலி, லக்னோ மற்றும் கைசர்கஞ்ச்; பீகாரில் சரண்; மற்றும் அனைத்து ஆறு மும்பை மக்களவைத் தொகுதிகள் மற்றும் மகாராஷ்டிராவில் கல்யாண் ஆகிய தொகுதிகள் ஆகும்.
உளவுத்துறை ரிப்போர்ட்: இந்த நிலையில்தான், மக்களவைக்கு இதுவரை நடந்து முடிந்த 4 கட்ட தேர்தல்களிலும் சேர்த்து பாஜகவால் 79 தொகுதிகளை கூட பெற முடியாது என உளவுத்துறை தெரிவித்துள்ளது என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், 4ம் கட்ட இதுவரை 379 இதில் 79 தொகுதிகளில் கூட பாஜக வெல்ல முடியவில்லை என்று ரிப்போர்ட் உளவுத்துறை மூலம் பாஜகவிற்கு சென்றுள்ளது. இதனால் மோடி, அமித் ஷா, பாஜக தலைவர்கள் கொந்தளித்து போய் உள்ளனர். எதை வேண்டுமானாலும் பேசலாம்.
மதக்கலவரம் செய்யலாம். ஏதாவது பேசலாம். ஏதாவது பண்ணி தேர்தலில் பிரச்சனை செய்யலாம். தோல்வி பயத்தில் மதக்கலவரம் செய்யலாம் என்று நினைக்கிறார்கள். காங்கிரஸ் இதை விடாது. இந்த தேர்தலில் ஏதாவது பிரச்சனை செய்யலாம். வில்லங்கம் ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள்.
மக்கள் இதை கவனிக்க வேண்டும். பாஜகவின் திட்டத்தை தோல்வி அடைய செய்ய வேண்டும். தோல்வி பயத்தில் மோடி இருக்கிறார். மோடி, அமித் ஷா, பாஜக தலைவர்கள் அரண்டு போய் இருக்கிறார்கள். இதனால் தேர்தலுக்கு எதிராக என்ன வேண்டுமானாலும் அவர்கள் செய்வார்கள், என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications