அமர் பிரசாத் ஆள்வச்சு அடிச்சாரு..தலையில் தையலுடன் பாஜக பெண் நிர்வாகி சகோதரி! சென்னை போலீசில் புகார்
சென்னை: பாஜகவை சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி பாஜக பெண் நிர்வாகியை ஆள் வைத்து அடித்ததால் தலையில் தையல் போடப்பட்டு இருப்பதாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அவரது சகோதரி புகார் அளித்து இருக்கிறார்.
சென்னை கோட்டூர்புரம் பாரதி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ஆண்டாள். இவர் பாஜக மாவட்ட துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் இவரது சகோதரி தேவி சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்து இருக்கிறார். அதில் குறிப்பிட்டு உள்ளதாவது, "நான் என் தங்கையுடன் வசித்து வருகிறேன். என் தங்கை ஆண்டாள் பாஜக மாவட்ட துணைத் தலைவராக இருந்து வருகிறார்.

கடந்த 19-1-24 அன்று பாரத பிரதமர் தமிழ்நாடு வந்தபோது சித்ரா நகரில் இருந்து ஆட்களை அழைத்து வருவது சம்பந்தமாக என் தங்கைக்கும் நிவேதா என்பவருக்கும் இடையே பிரச்சனை இருந்தது. அதை பற்றி எனக்கு எந்த விவரமும் தெரியாது. ஆனால், 21-1-24 என்று இரவு 8.15 மணியளவில் நான் என் தங்கையின் வீட்டில் இருந்தபோது எங்கள் வீட்டிற்கு பாஜக அமர் பிரசாத் ரெட்டியிடம் ஓட்டுநராக வேலை செய்யும் மண்டல துணைத் தலைவர் ஸ்ரீதர், பாஜக மகளிர் அணி மண்டல தலைவர் நிவேதா, பாஜக மாவட்ட துணைத் தலைவர் கஸ்தூஉரி இன்னும் எனக்கு தெரியாத 3 நபர்கள் என் தங்கையின் வீட்டுற்கு வந்தார்கள்.
என் ஓனர் அமர்பிரசாத் ரெட்டியிடம் உன் தங்கை பணம் வாங்கி வந்துவிட்டார். அதில் எங்களுக்கு பங்கு கொடு என்று கேட்டு எங்களை அடிக்க தொடங்கினார்கள். எங்களை அடிக்கும் போது அமர் பிரசாத் ரெட்டி தான் உங்களை அடிக்க சொன்னார் என்று சொல்லி அடித்தனர். அவர்களை என்னை அடித்து என் மண்டையை உடைத்தார்கள். என் தங்கையை அடித்து எங்கள் வீட்டையும் தாக்கினார்கள். ஸ்ரீதர் என்னை அடிக்கும்போது தான் போட்டிருந்த பேண்டை அவிழ்த்து காட்டி அசிங்கமாக திட்டி எங்கள் பங்கு வரவில்லை என்றால் உங்களை குடும்பத்துடன் கொன்று விடுவேன் என்று மிரட்டினார்.
என்னை அவர்கள் அடிக்கும்போது கஸ்தூரி என்பவர் என் கைகளை பிடித்துக் கொண்டார். நான் என் மண்டை உடைந்த உடன் நான் பாரதி ராஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டேன். நான் அவர்களுக்கு பயந்து இரண்டு நாட்களாக வெளியே வரவில்லை. எங்கள் வீட்டுக்கு வந்து என் மண்டையை உடைத்து என் தங்கையை அடித்து எங்கள் வீட்டை உடைத்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications