பிரதமர் மோடியிடமே பொய் சொல்லி ஏமாற்றிய பாஜக நிர்வாகி! சென்னையில் சம்பவம்.. யார் இந்த அஸ்வந்த்?
சென்னை: கடந்த 4ம் தேதி கல்பாக்கத்தில் புதிய ஈணுலை திட்ட தொடக்க விழாவுக்காக பிரதமர் மோடி தமிழகம் வந்தார். அப்போது சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை சந்தித்த பாஜக நிர்வாகி ‛தனக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. குழந்தைகளை பார்க்காமல் இங்கு வந்தேன்' என பொய் சொல்லி ஏமாற்றியதும், தற்போது அந்த நிர்வாகி செல்போனை சுவிட்ஆப் செய்துவிட்டு தலைமறைவாகி உள்ள தகவலும் வெளியாகி உள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கி விட்டது. இந்த மாதத்தில் தேர்தல் தேதி என்பது அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இத்தகைய சூழலில் தான் பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். அந்த வகையில் தமிழ்நாட்டுக்கும் பிரதமர் மோடி அடிக்கடி வருகை தருகிறார்.
கடந்த மாதம் 27ம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரை நிறைவு பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அதன்பிறகு தூத்துக்குடி மாவட்டம் குலசையில் நடந்த அரசு விழா, திருநெல்வேலி பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

அதன்பிறகு கடந்த 4ம் தேதி மீண்டும் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தந்தார். கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உள்ள 500 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய ஈணுலை திட்டத்தை தொடங்கி வைத்ததோடு நந்தனத்தில் நடைபெற்று பாஜக கூட்டத்தில் அவர் உரையாற்றினார். முன்னதாக சென்னை வந்த பிரதமர் மோடியை பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.
அப்போது அஸ்வந்த் பிஜய் என்ற பாஜக நிர்வாகி பிரதமர் மோடியை விமான நிலையத்தில் வரவேற்றார். பிரதமர் மோடியை பார்த்த அஸ்வந்த் பிஜாய், ‛‛தனது மனைவிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. ஆனாலும் குழந்தைகளை பார்க்காமல் உங்களை வரவேற்க வந்துள்ளேன்'' என தெரிவித்தார். இதை கேட்டு நெகிழ்ந்து போன பிரதமர் மோடி அவரது தோளில் தட்டிக்கொடுத்து உடனடியாக குழந்தையை பார்க்க செல்லும்படி அறிவுறுத்தினார்.
மேலும் இந்த சம்பவத்தை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தமிழ் மொழியில் குறிப்பிட்டு இருந்தார். அதில், ‛‛சென்னை விமான நிலையத்தில் என்னை வரவேற்க வந்தவர்களில் அஸ்வந்த் பிஜாய் என்ற பாஜக தொண்டரும் இருந்தார். அவர் தனது மனைவிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாகவும், அவர்களை பார்க்காமல் இங்கே வந்திருப்பதாகவும் என்னிடம் கூறினார். நீங்கள் இங்கே வந்திருக்கக்கூடாது என நான் அவரிடம் கூறினேன்.
மேலும் அகமகிழ்ச்சி அடைகிறேன். அஸ்வந்த் பிஜய் குடும்பத்துக்கு எனது வாழ்த்துகளையும் தெரிவித்தேன். அர்ப்பணிப்பும், உறுதிப்பாடும் கொண்ட இதுபோன்ற தொண்டர்கள் பாஜகவில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது தொண்டர்களின் இத்தகைய அன்பையும், பாசத்தையும் பார்த்து அகமகிழ்கிறேன்" என்று பதிவிட்டு இருந்தார். இந்த பதிவை பார்த்த பலரும் அஸ்வந்த் பிஜய் யார்? என தேட தொடங்கினர்.
அப்போது தான் அவர் கேரளாவை சேர்ந்தவர் என்பதும், அவர் தற்போது சென்னை வேளச்சேரியில் வசித்து வருவதும் தெரியவந்தது. மேலும் அதேவேளையில் இன்னொரு தகவல் பாஜக நிர்வாகிகளை அதிர்ச்சியடைய வைத்தது. அதாவது அஸ்வந்த் பிஜய் தனது மனைவிக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாகவும், அவர்களை பார்க்காமல் பிரதமர் மோடியை சந்தித்ததாகவும் கூறியது பொய் என்பது தெரியவந்தது. மேலும் பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவர் அப்படி பொய் சொன்னதும், ஆனால் இந்த சம்பவத்தை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதால் அவரை பலரும் தேடிய நிலையில் அவருக்கு இரட்டை குழந்தை பிறக்காதது தெரியவந்ததும் புலனானது.
தற்போது இந்த தகவல் வெளியான நிலையில் அஸ்வந்த் பிஜய் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து கொண்டு தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications