கடை போட்டு தங்கக் கடத்தல்! 160 கோடியாமே! வசமாய் சிக்கிய சபீர் அலி.. பாஜக பிரமுகரை தூக்கிய அதிகாரிகள்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் 167 கோடி ரூபாய் மதிப்பிலான 267 கிலோ தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரபல யூட்யூபரான சபீர் அலி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாஜக நிர்வாகி ப்ரித்வியிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. மேலும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தப்பட்டு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் சமீபகாலமாக தங்கம் கடத்தப்படும் செயல்கள் மிக அதிகளவில் நடைபெற்று வருவதாகவும், சென்னை சர்வதேச விமான நிலைய புறப்பாடு பகுதியில் இருந்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் இரண்டு மாதங்களில் 167 கோடி ரூபாய் மதிப்புடைய 267 கிலோ தங்கம் கடத்தலில் யூடியூபர் மற்றும் பாஜக பிரமுகர் உட்பட 9 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணையில் பொம்மைகள் விற்பனை செய்யும் கடையை கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சபீர்அலி மற்றும் பிரித்வி ஆகியோர் இணைந்து விமான நிலைய புறப்பாடு பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக நடத்தி வருகின்றனர். பல லட்ச ரூபாய் முதலீடு செய்து இந்திய விமான நிலைய ஆணையத்தின் அனுமதியை பெற்று அதில் 7 பேரை பணிக்கு அமர்த்தி அவர்களுக்கு விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வருவதற்கான சிறப்பு அனுமதியுடன் பிசிஏஎஸ். பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், வெளிநாடுகளில் இருந்து வரும் டிரான்சிட் பயணிகள் சிலர், கடத்திக் கொண்டு வரும் தங்கத்தை விமான நிலைய பாதுகாப்பு பகுதியில் உள்ள கழிவறையில் மறைத்து வைத்து விட்டு, சபீர்அலிக்கு தகவல் கொடுத்து விட்டு சென்று விடுவார்கள் எனவும், அப்போது சபீர் அலி தனது கடையில் உள்ள ஊழியர்களை அனுப்பி அந்த தங்கத்தை ஊழியர்களின் உள்ளாடைக்குள் அல்லது உடலின் பின் பகுதிக்குள் மறைத்து வைத்து வெளியில் கொண்டு வந்து கடத்தல் கும்பலிடம் கொடுத்து அனுப்பி விடுவார்கள் எனவும் கூறப்பட்டது.
இவ்வாறாக கடந்த இரண்டு மாதங்களாக இந்த கடத்தல் தொழில் சென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், விமான நிலைய தங்க கடத்தலில் சம்மந்தப்பட்ட சபீர் அலி சபீர் அலி, அவர் கடையில் பணியாற்றும் 7 ஊழியர்கள் ஆகிய 9 பேரை கைது செய்தனர். இந்நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக 6 பேருக்கு சுங்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர்.
மேலும் விமான நிலையத்தில் கடையை ஒதுக்கீடு தொடர்பாக வித்வேதா பிஆர்ஜி நிறுவன இயக்குனராக இருந்த பாஜக நிர்வாகி ப்ரித்வியிடமும் விசாரணை நடைபெற்றது/ விசாரணையின் அடிப்படையில் அவரது நிறுவனம் சென்னையில் பல்வேறு பகுதிகளில் ஒப்பந்த அடிப்படையில் மால்களில் கடைகள் நடத்தி வருவது தெரிய வந்தது. இதை அடுத்து அந்த கடைகளில் சோதனை நடத்தப்பட்டு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தங்கக் கடத்தலில் ஏற்கனவே கைதாகி இருக்கும் பிரபல யூட்யூபர் சபீர் அலி கடத்தல் கும்பலைச் சேர்ந்த இலங்கை குமார் என்பவரிடமும் விசாரணை நடந்துள்ளது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் பாஜக நிர்வாகியான பிரிதிவி மூலம் விமான நிலையத்தில் கடை ஒப்பந்தம் நடைபெற்றது தொடர்பாகவும், சபீர் அலியிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இருவரிடையே சுமார் 77 லட்சம் ரூபாய் அளவிலான வங்கி பரிவர்த்தனைகள் நடைபெற்றதும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications