மதக் கலவரத்தை தூண்டும் பதிவு-பாஜக சவுதாமணி ஜாமீனில் விடுதலை-சிறைவாசலில் திமுகவுக்கு எதிராக முழக்கம்!
சென்னை: மதக்கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வந்த பாஜகவின் செயற்குழு உறுப்பினர் சவுதாமணி சென்னை புழல் சிறையில் இருந்து இன்று ஜாமீனில் விடுதலையானார். சென்னை புழல் சிறை வாசலில் சவுதாமணிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பளித்தனர்.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட சவுதாமணி, சென்னையில் முன்னணி டிவி நிறுவவனங்களில் செய்திவாசிப்பாளராகப் பணியாற்றினார். அரசு பணி ஆசிரியராக பணி கிடைத்த போதும் அதனைவிட்டு மீடியா உலககுக்கு வந்தவர் சவுதாமணி. மீடியாவில் இருந்து விலகிய பின்னர் பாஜகவில் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறார். தற்போது பாஜகவின் செயற்குழு உறுப்பினராக உள்ளார் சவுதா மணி.

சமூக வலைதளங்களில் சவுதா மணி ஆக்டிவ்வாக செயற்பட்டு வருபவர். சமூக வலைதளங்களில் வலம் வரும் அத்தனை வலதுசாரி கருத்துகளையும் அப்படியே பகிர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கியவர். இதனால் சவுதாமணி மீது சைபர் கிரைமில் புகார்களும் கொடுக்கப்பட்டிருந்தன. இதில் முன்ஜாமீன் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தை சவுதாமணி நாடியிருந்தார். ஆனால் அவருக்கு முன்ஜாமீன் கிடைக்கவில்லை.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட திமுக இளைஞரணி செயலாளர் கோல்டன் என்பவர் ஆலந்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, மத கலவரத்தை தூண்டுவது, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சவுதாமணி மீது வழக்குப் பதிவு செய்தனர். அதேநேரத்தில் சென்னையில் நடைபெற்ற பாஜக உண்ணாவிரதப் போராட்டத்திலும் தமிழக அரசை இழிவாக விமர்சித்தார் சவுதாமணி என்பது மற்றொரு புகார்.
இப்புகார்கள், வழக்குகள் அடிப்படையில் சில நாட்களுக்கு முன்னர் சவுதாமணியை சென்னை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சவுதாமணி மனுத் தாக்கல் செய்தார். இதனை ஏற்று சவுதாமணிக்கு ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.
ஜாமீன் கிடைத்த நிலையில் சென்னை புழல் சிறையில் இருந்து இன்று சவுதாமணி விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த சவுதாமணிக்கு அவரது ஆதரவாளர்கள் மாலை அணிவித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். அப்போது தம்மை கைது செய்த திமுக அரசைக் கண்டித்து சவுதாமணி சிறைவாசலில் முழக்கங்களை எழுப்பினார்.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications