"நாய்" என்று யாரை சொல்கிறார் காயத்ரி.. சூர்யாவை பார்த்து குரைக்கின்றதே..!
காயத்ரி ரகுராம் நடிகர் சூர்யாவை போஸ்டரில் விமர்சித்துள்ளார்
சென்னை: சூர்யாவை பார்த்து நாய்கள் குரைப்பது போன்ற ஒரு போஸ்டரை பதிவிட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.. இது பெரும் சர்ச்சையை கிளப்பி விட்டு வருகிறது.
ஜெய்பீம் படத்தை முதல்வர் ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பாராட்டிய நிலையில், மற்றொரு பக்கம், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை படம் அவதூறு செய்வதாக பாமக தரப்பில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
சர்ச்சையை ஏற்படுத்திய காட்சி, ஜெய் பீம் படத்திலிருந்து நீக்கப்பட்டது என்றாலும், பாமக தொடர்ந்து எதிர்ப்பு காட்டி வருகிறது.. பாமகவுக்கு தமிழக பாஜகவும் தன்னுடைய ஆதரவை தெரிவித்து வருகிறது.

விமர்சனம்
அந்த வகையில், பாஜக கலை கலாசார பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம்தொடர்ந்து சூர்யாவை விமர்சித்து வருகிறார்.. சூர்யாவை மட்டுமல்ல, சூர்யாவுக்கு யார் ஆதரவு தந்தாலும் அவர்களையும் விமர்சித்து கண்டனம் தெரிவித்து வருகிறார்.. ராஜாக்கண்ணு என்ற பழங்குடி நபரின் மனைவி பார்வதி பெயரில் ரூ. 10 லட்சம் டெபாசிட் செய்வதாக சூர்யா சொன்னதுமே காயத்ரி பொங்கி எழுந்துவிட்டார்.

உதயநிதி
"உங்கள் நிஜ வாழ்க்கை கதை மூலம் நான் கோடிகளை சம்பாதிப்பேன், எல்லோரும் கேள்வி எழுப்பிய பிறகு நான் உங்களுக்கு லட்சங்களை தருகிறேன். சமூக நீதி... திமுக தொண்டர்கள் ரசிகர் பட்டாளத்தை உதயநிதியில் இருந்து சூர்யாவுக்கு மாற்றிவிட்டார்களா? அடுத்த திமுக முதல்வர் வேட்பாளர் நடிகர் சூர்யா? நான் குழப்பத்தில் இருக்கிறேன். why tension? Cool..' எனபதிவிட்டிருந்தார்..

ரஞ்சித்
சூர்யாவுக்கு டைரக்டர் ரஞ்சித் ஆதரவு தந்ததுமே, "ரஜினிகாந்த் சார் உங்களுக்கு இரண்டு பெரிய படங்களில் வாய்ப்பு கொடுத்து உங்களை பெரிய இயக்குனராக்கிவிட்டார்.. ரஜினி சாரை திமுக ஆதரிக்கும் Plip Plip YouTube channel தகாத வார்த்தைகளால் திட்டினார் விமர்சித்தார்... நீங்களும் சினிமா துறையும் ஏன் அவருக்கு ஆதரவாக நிற்கவில்லை? ஆனால் ஒரு சமூகத்தை குறிவைத்த சூர்யாவை மட்டும் ஆதரிக்கிறீர்கள். உங்கள் நோக்கம் என்ன? யார் யாரைப் பிரிக்கிறார்கள்? சினிமாவை முழுமையாக திமுக கைப்பற்றியது. திமுக குடும்பத்தின் அடிமைகளாக சினிமா மாறிவிட்டது" என்று காட்டமாக விமர்சித்திருந்தார்.

நாய்கள்
ஆனால், இன்று ஒரு ட்வீட் போட்டு, சூர்யாவை விமர்சித்ததுடன், காயத்ரி எல்லை மீறிவிட்டதாகவே தெரிகிறது.. ஒரு போஸ்டரில் ஜெய்பீம் சூர்யா நடந்து செல்வது இடம்பெற்றுள்ளது.. சூர்யாவுக்கு பின்னால் நான்கைந்து நாய்கள் குரைக்கின்றன.. சூர்யாவை பார்த்து அந்த நாய்கள் குரைப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரைதான் காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ளார்.

பைரவர் கடவுள்
சூர்யா ரசிகர்கள் இந்த போஸ்டரை தெரியாமல் தவறுதலாக உருவாக்கினார்கள் என்று காயத்ரியே ஒரு விளக்கமும் தந்துள்ளார்.. அத்துடன், "நாய்கள் திருடன் பார்த்து குரைக்கும் அல்லது தெரியாதவர்களை எச்சரிக்க குரைக்கும் அல்லது தீய சக்தியை பார்த்து குரைக்கும்.. பைரவர் கடவுள் மக்களுக்கு பாதுகாவலர் மற்றும் மக்களுக்கு துணை.." என்றும் பதிவிட்டுள்ளார்.
Recommended Video

கொந்தளிப்பு
காயத்ரியின் இந்த ட்வீட் பெரும் சர்ச்சையை கிளப்பி விட்டு வருகிறது.. நாய் என்று யாரை குறிப்பிட்டு சொல்கிறார் காயத்ரி என்று தெரியவில்லை.. இந்த போஸ்டரை சூர்யாவின் ரசிகர்கள் தெரியாமல், தவறுதலாக உருவாக்கிவிட்டார்கள் என்று சொல்வதன் உண்மைத்தன்மையும் தெரியவில்லை.. ஏற்கனவே சூர்யா ரசிகர்கள் கொந்தளிப்பில் உள்ள நிலையில், காயத்ரியின் இந்த ட்வீட்டானது, எரிகிற எண்ணெய்யில் லிட்டர் கணக்கில் பெட்ரோலை ஊற்றி வருவது போல அமைந்து வருகிறது.
-
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ












Click it and Unblock the Notifications