சசிகலா புஷ்பாவுக்கு பாலியல் சீண்டல்.. குற்றம்சாட்டப்பட்ட பாஜக நிர்வாகி பால கணபதிக்கு புது அங்கீகாரம்
சென்னை: முன்னாள் எம்பி சசிகலா புஷ்பாவிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி பொன் பாலகணபதிக்கு அவர் இருக்கும் ஒரே குழுவில் இடம் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தியாகி இம்மானுவேல் சேகரனின் 65 ஆவது நினைவு தினம் கடந்த 11 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்த இருந்தனர்.
இதனால் அந்த மாவட்டம் முழுவதும் காவல் துறையின் கட்டுப்பாட்டில் சென்றது. இதையடுத்து 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டிருந்தது. இந்த விழாவில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டன.

நயினார் நாகேந்திரன்
பாஜக சார்பில் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி, முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா, மாநில செயலாளர் அஸ்வத்தாமன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது பாஜக நிர்வாகி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வீடியோ வைரலானது.

சசிகலா புஷ்பா
அலைமோதும் கூட்டத்தில் சசிகலா புஷ்பா அஞ்சலி செலுத்த வந்தார். அவருக்கு பின்னால் பொன் பாலகணபதியும் வந்தார். அவர் அஞ்சலி செலுத்தாமல் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சசிகலா புஷ்பாவின் முடியை பிடித்து இழுத்தபடியே உரசி கொண்டே முன்னால் வந்தார்.

சசிகலா புஷ்பாவிடம் சீண்டல்
அப்போது சசிகலா புஷ்பாவின் இடுப்பில் கை வைத்தார். அப்போது சுதாரித்த சசிகலா புஷ்பா பாலகணபதியின் கையை தள்ளி தள்ளி விட்டார். சசிகலா புஷ்பாவின் மார்பின் மீது உரசியபடியே கையை நீட்டி எதையோ யாரிடமோ கூறினார். அப்போதும் சசிகலா புஷ்பா தன்னை தற்காத்து கொண்டார்.

சசிகலா புஷ்பாவுக்கு சங்கடம்
இப்படி பல்வேறு சங்கடங்களால் சசிகலா புஷ்பா நெளிந்த போதிலும் அதுகுறித்து எதையுமே கண்டுக்காமல் இருந்தார் பால கணபதி. ஒவ்வொரு முறையும் பாலியல் சீண்டலின் போதும் சசிிகலா புஷ்பா, பால கணபதியை முறைப்பதும், அதை அவர் கண்டு கொள்ளாமல் அடுத்தடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபடுவதுமாக இருந்தார்.

வீடியோ
இந்த வீடியோவை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் டிரோல் செய்தன. இதுகுறித்து பால கணபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டன. இந்த நிலையில் அவரை கட்சியிலிருந்து வெளியேற்றாத பாஜக புதியதொரு குழுவில் பால கணபதிக்கு இடம் கொடுத்துள்ளது.

புதிய அங்கீகாரம்
பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு தொடர்பாக பாஜகவில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவுக்கு காந்தி எம்எல்ஏதான் தலைவர். அதில் உறுப்பினர்களாக சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் உள்ளனர். அவருடன் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பால கணபதியும் அந்த குழுவில் இடம்பெற்றுள்ளார். பாலியல் சீண்டலால் பால கணபதி கட்சியை விட்டு வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு புதியதொரு அங்கீகாரத்தை பாஜக கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications