நெற்றியில் விபூதி, காவி! மீண்டும் நிறம் மாறிய திருவள்ளுவர்! ஆரம்பித்த ஆளுநர் ரவி.. திமுக பார்க்குது
சென்னை: இன்றைய தினம் "திருவள்ளுவர் திருநாள் விழா" என்ற சென்னையில் நடக்க உள்ள நிலையில், ஆளுநர் மாளிகை வெளியிட்டிருக்கும் அழைப்பிதழ் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, காவி உடையில் இருக்கும் திருவள்ளுவரின் புகைப்படத்தை வெளியிட்டு திருவள்ளுவர் தின வாழ்த்து தெரிவித்தனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளப்பின. இந்த நிலையில், தற்போது மீண்டும் இதுபோன்று சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இன்று விழா: இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் "திருவள்ளுவர் திருநாள் விழா" நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை அறிவித்திருக்கிறது.. ஆளுநரின் செயலாளர் கிர்லோஷ்குமார் பெயரில் இந்த அழைப்பிதழ் வெளியிடப்பட்டுள்ளது..

திருவள்ளுவர் பெயரில் விழா என்பதால், இந்த அழைப்பிதழில், திருவள்ளுவரின் படம் மட்டும் இடம்பெற்றிருக்கிறது.. ஆனால், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டுள்ளது. நெற்றியில் விபூதி, கைகளில் விபூதி, கழுத்தில் ருத்திராட்சை என வித்தியாசமாக காணப்படுகிறார் திருவள்ளுவர்.
வெள்ளுடை: எப்போதுமே அரசு சார்பிலும் சரி, பல்வேறு அமைப்புகள் சார்பிலும் சரி, அவர்கள பயன்படுத்தும் படங்களில் திருவள்ளுவர் வெள்ளுடை அணிந்திருப்பதே வழக்கமாகும்.. ஆனால், பாஜக மற்றும் இந்து அமைப்புகள் காவி நிற உடையோடு திருவள்ளுவர் படத்தை தொடர்ந்து அச்சிட்டு வருகிறார்கள்..
இப்படித்தான் கடந்த ஜனவரி 16 திருவள்ளுவர் தினத்தன்றுகூட, காவி உடை அணிந்த திருவள்ளுவர் போட்டோவுக்கு, ஆளுநர் ரவி மலர்தூவி மரியாதை செலுத்தியிருந்தார்.. அதுமட்டுமல்லாமல் இந்த போட்டோவைதான், ஆளுநர் மாளிகையின் சோஷியல் மீடியா பக்கத்திலும் பதிவிடப்பட்டிருந்தது..
தம்பிதுரை: ஆளுநரின் இந்த பதிவுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி, அதிமுக எம்.பி தம்பிதுரை, திமுக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி என திமுக, அதிமுக இரு தரப்பினருமே கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.
இப்போது மறுபடியும் காவி உடை அணிந்த திருவள்ளுவர் போட்டோவை ஆளுநர் ரவி பயன்படுத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதுவும், ஆளுநர் மாளிகையே காவி உடையில் வள்ளுவர் படத்தை வெளியிட்டிருப்பது அதற்கு மேல் விவாதப் பொருளாகியுள்ளது.
செல்வப்பெருந்தகை: முன்னதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இதுகுறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.. அதில், "அரசுடமையாக இருந்த சாதி, மத, சமய சார்பற்ற திருவள்ளுவரின் புகைப்படம், 1991இல், நாட்டுடமையாக்கப்பட்டது. அதன் பிறகு, அந்தப் புகைப்படத்தை நாட்டில் உள்ள அனைவரும் அச்சிட்டு பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் புகைப்படத்தை மாற்றி, சாதி, மத, சமயம் சார்ந்து ஆளுநர் மாளிகை புகைப்படத்தை வெளியிடுவது சட்டத்திற்குப் புறம்பானது. சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஆளுநரே இப்படிச் செய்வது கண்டனத்திற்குரியது. வருத்தத்திற்குரியது" என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications