கே.என்.நேரு நல்ல வைஷ்ணவர்.. அவரை அறநிலையத் துறை அமைச்சராக்குங்கள்.. எச்.ராஜா கான்டக்ட் சர்டிபிகேட்
சென்னை: நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக உள்ள கே.என்.நேருவை அறநிலையத் துறை அமைச்சராக்குங்கள் என பாஜகவை சேர்ந்த எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா இன்று காலை சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு முன் பகுதியில் பல ஏக்கர் கோயில் நிலத்தை நீதிமன்ற பயன்பாட்டுக்கு குத்தகைக்கு கேட்கப்பட்டுள்ளது.
அந்த நிலத்தை நீதிமன்றத்திற்கு விற்பதாக அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. ஆனால் கோயில் நிலங்களை எந்த பொது பயன்பாட்டுக்காகவும் விற்பனை செய்யக் கூடாது என உயர்நீதிமன்ற அமர்வு 2018 மற்றும் 2021 இல் தீர்ப்பளித்தது.

கோயில் நிலத்தை உயர்நீதிமன்றத்திற்கு விற்பனை செய்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில் நிலங்களையும் விற்பனை செய்யலாம் என நினைக்கிறார்கள். கோயில் சொத்துகளை விற்பனை செய்வது, கோயில் நகைகளை உருக்குவது, உண்டியல் பணத்தை கொள்ளையடிப்பது போன்ற நோக்கத்துடன் தமிழக முதல்வரும் அமைச்சர் சேகர்பாபுவும் செயல்பட்டு வருகிறார்கள்.
கோயில் நிலத்தை விற்க அறநிலையத் துறைக்கு உரிமை இல்லை. அதை மீறி கோயில் நிலங்களை விற்பனை செய்தால் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு 150 ஏக்கர் நிலம் உள்ளது. இதனால் உயர்நீதிமன்றத்திற்கு மேலும் நிலம் தேவையில்லை. ஒடிஸா ரயில் விபத்துக்கு சதி வேலை காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட வாய்ப்பில்லை. ரயில் நிலைய மேலாளர் தலைமறைவாக இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு டயர்களை வைத்து ரயிலை கவிழ்க்க முயற்சி நடந்துள்ளது. இதனால் சதி வேலைக்கு அதிக வாய்ப்புள்ளது. ஒடிஸா ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணை தொடங்கியது. விசாரணை முடிந்த பிறகு உண்மை தெரியவரும். ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்துவிட்டு 22 பேர் பலியாகினர்.
இந்த விவகாரத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்யவில்லை. இதுகுறித்து கேட்காத திருமாவளவன் ரயில்வே துறை அமைச்சரை ராஜினாமா செய்ய சொல்ல தகுதியில்லை. மேலும் ரயில் விபத்து வழக்கில் அவர் வாயே திறக்கக் கூடாது. அறநிலையத் துறை அமைச்சராக சேகர்பாபு தொடரக் கூடாது.
அவருக்கு பதிலாக கே.என்.நேருவை அறநிலையத் துறை அமைச்சராக நியமிக்கலாம். அவர் நல்ல வைஷ்ணவர். கடவுளுக்கு துரோகம் செய்ய மாட்டார். மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்களை என்ஐஏ கைது செய்துள்ளது. ஆளுநரை விமர்சிப்பது சரியல்ல. அவர் துணை வேந்தர்களிடம் தான் பேசினார்.
சாலையில் செல்வோரை அழைத்து பேசவில்லை. சீன நிறுவனங்கள் இந்தியா வர விரும்புகின்றன. அதற்கு வீணாக நேரில் சென்று அழைக்க வேண்டாம் என்றுதான் கூறியுள்ளார். இதனால் பொன்முடி, வைகோ போன்றவர்கள் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும் என கூறியிருந்தார்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications