"தேசியத்தையே கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டாங்க.. திமுகவும் இதுக்கு உடந்தை".. சொல்வது எச். ராஜா!
திமுக அரசை சாடி பாஜகவின் எச்.ராஜா பேட்டி தந்துள்ளார்
சென்னை: "எல்லாத்துக்கும் காரணம் இந்த திமுகதான்.. ஆட்சிக்கு வந்ததில் இருந்துதான் இப்படி இருக்கு.. நாட்டின் தேசியத்தையே கேள்வி கேட்கும் பேச்சுகள் இப்போது அதிகமாகிவிட்டது.. இஷ்டத்துக்கும் பேச வேண்டியது.. பிரிவினைவாதத்தை வளர்க்கும் சூழ்நிலையை உருவாக்க திமுக அரசு உடந்தையாக இருப்பது கண்டிக்கத்தக்கது" என்று எச்.ராஜா விமர்சித்துள்ளார்.
எம்எல்ஏ கொங்கு ஈஸ்வரன், "சென்ற ஆளுநர் உரையில் நன்றி, வணக்கம், ஜெய்ஹிந்த் என்று இருந்தது. ஆனால், இந்த ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இல்லை.. அந்த வார்த்தை இடம்பெறாதது வரவேற்கத்தக்கது" என்ற வகையில் பேசியிருந்தார்.

இறுதியில் ஜெய்ஹிந்த் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து ஈஸ்வரன் விளக்கமும் தந்தார்.. "ஜெய்ஹிந்த் என்ற வார்தையை பற்றி நான் பேசிய விஷயத்தை என்னுடைய உரையை முழுமையாக கேட்காமல் என்னுடைய உரையை 15 நொடிகளுக்கு எடிட் செய்து அதன்மூலம் அரசியல் செய்து வருகின்றனர்" என்று தெளிவுபடுத்தினார்.
அப்போதும் பாஜக தரப்பு இதை ஏற்கவில்லை.. தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சொல்லி வருகிறது.. அந்த வகையில், எச்.ராஜாவும் ஒரு கருத்து சொல்லி உள்ளார்.. காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் சொன்னதாவது:
"திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான், நாட்டின் தேசியத்தையே கேள்வி கேட்கும் பேச்சுகள் அதிகரித்துள்ளன. எம்எல்ஏ ஈஸ்வரன் சட்டப்பேரவையில், "ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் என்று இல்லாதது தமிழகமே தலைநிமிர்ந்தது" என்றார். இதுபோன்ற தலைகுனிவு வேற கிடையாது.. தமிழகத்தின் செண்பகராமன் பிள்ளை தான் ஜெய்ஹிந்த் என்று முன்மொழிந்தார்.
அதன் பிறகுதான், நேதாஜி ஜெய்ஹிந்த் என்பதை பிரபலப்படுத்தினார்... முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கூட்டம் முடிந்த பிறகு 3 முறை ஜெய்ஹிந்த் என்பார்... ஆனால், திமுக கூட்டணி எம்எல்ஏ இப்படி கூறியதை காங்கிரஸார் எப்படி சகித்துக் கொள்கிறார்கள்? தேசியத்தை கேள்வி கேட்கும் பேச்சுகள் தற்போது அதிகரித்துள்ளன.
பிரிவினைவாதத்தை வளர்க்கும் சூழ்நிலையை உருவாக்க திமுக அரசு உடந்தையாக இருப்பது கண்டிக்கத்தக்கது... பூஜை முறைகள் குறித்து கோர்ட் தீர்ப்புகள் இருந்தும், இஷ்டம் போல் பேசுவது, அதன் சொத்துகளை பாதுகாக்காமல் இருப்பது, இந்து பள்ளிகள் மீது குறி வைத்து நடவடிக்கை எடுப்பது திமுகவின் திட்டமிட்ட செயல்" என்றார் எச்.ராஜா.
-
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா












Click it and Unblock the Notifications