எம்எல்ஏ பதவியை விட்டுவிட்டு வந்தேன்.. பாஜகவில் ஓராண்டாக பொறுப்பு வழங்கலை.. விஜயதாரணி கொடுத்த பதில்!
சென்னை: பாஜகவில் பொறுப்பு அளிக்கப்படாதது குறித்து முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏவும், மூத்த நிர்வாகியுமான விஜயதாரணி பதில் அளித்துள்ளார். விரைவில் பாஜகவில் அதிருப்தி வராத அளவிற்கு பொறுப்பு அளிக்கப்படும் என்று கட்சி மேலிடம் உறுதி கொடுத்துள்ளதாக கூறிய விஜயதாரணி, புதிய மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-வாக இருந்து கொண்டு திடீரென பாஜகவில் இணைந்தவர் விஜயதாரணி. இதன் காரணமாக அவர் வகித்த எம்எல்ஏ பதவி பறிபோனது. இருந்தாலும் பாஜக தரப்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்பட்டது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்லாமல், சட்டமன்ற இடைத்தேர்தலில் கூட போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து பாஜகவுக்காக தேர்தல் பணிகளை மேற்கொண்ட விஜயதாரணி, ஒரு கட்டத்திற்கு பின் அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்தார். எம்எல்ஏ பொறுப்பை விட்டுவிட்டு வந்த எனக்கு இதுவரை பதவி அளிக்கவில்லை என்று பாஜக மேடையிலேயே பேசி இருந்தார். இதற்கிடையே டெல்லி சென்று பாஜகவின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்தார்.
தமிழக பாஜக நிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்த அவர், திடீரென நேற்று நயினார் நாகேந்திரன் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பாஜக முக்கிய தலைவர்களான தமிழிசை செளந்திரராஜன், அண்ணாமலை, கரு.நாகராஜன், சசிகலா புஷ்பா, சரத்குமார், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அந்த பட்டியலிலும் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணியின் பெயர் இடம்பெறவில்லை. இதுகுறித்து விஜயதாராணி பேசுகையில், விரைவில் பொறுப்புகள் வழங்கப்படும் என்று மேலிடமும், கட்சியும் உறுதி கொடுத்துள்ளனர். மீண்டும் அதிருப்தி வராத அளவிற்கு பதவி அளிக்கப்படும் என்று உறுதி கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் நல்ல பொறுப்பு வழங்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டு, பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு நீண்ட அரசியல் அனுபவம் உள்ளது. சட்டமன்றத்திற்கு 5 முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமைச்சராகவும் இருந்த அனுபவம் இருக்கிறது. அவரின் பயணம் பாஜகவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும். 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு வெற்றியை தேடி கொடுப்பார் என்பதில் சந்தேகமில்லை என்று தெரிவித்துள்ளார்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications