"சக்சஸ்.." பக்கபலமாக வந்த பாஜக நடிகை.. பூரிப்பில் சசிகலா.. டெல்லிக்கு டிக்கெட்? செம ட்விஸ்ட்
சென்னை: அதிமுகவை கைப்பற்றும் விக்கிரமாதித்ய முயற்சிகள் சசிகலா இன்னமும் ஓயவில்லை. பாஜகவை சேர்ந்த நடிகை மூலம் டெல்லிக்கு தூதுவிட்டு காத்திருந்த சசிகலாவுக்கு நல்ல செய்திகள் வந்துள்ளனவாம். இதனால் சசிகலா விரைவில் டெல்லி பயணம் மேற்கொள்ளப் போகிறார் என்கின்றன அவரது ஆதரவு வட்டாரங்கள்.
அதிமுகவை எப்படியும் கைப்பற்றுவோம் என பல்லவி பாடிக் கொண்டிருந்தார் சசிகலா. ஆனால் அவரது அதிமுகவை கைப்பற்றும் முயற்சி இம்மி கூட நகரவில்லை. இதனால் இப்போது ஆன்மீக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார் சசிகலா. அதாவது ஊர் ஊராக கோவில் கோவிலாக தரிசனம் மேற்கொண்டு வருகிறார் சசிகலா.

இருப்புக்கு போராடும் சசிகலா
இப்படி ஆன்மீக பயணம் போகும் இடங்களில் சசிகலாவை அவரது ஆதரவாளர்கள் சந்திப்பதும் உண்டு. அப்படியே செய்தியாளர்களிடமும் பேசிவிடுகிறார் சசிகலா. இருந்தபோதும் சசிகலாவின் பேட்டி, அறிக்கை என எதுவுமே தமிழக அரசியலில் ஒரு துளி கூட தாக்கத்தைத் தருவதும் இல்லை. தம் இருப்புக்காக சசிகலா இப்படி செய்து கொண்டிருக்கிறார் என்பதே பெரும்பாலானோர் கருத்து.

நடிகை விஜயசாந்தி மூலம் தூது
ஆனாலும் அதிமுகவை தம் வசமாக்கித்தான் தீருவது என்பதில் ஏதோ ஒருவித நம்பிக்கையோடு வலம் வருகிறார் சசிகலா. அவரது இந்த முயற்சியில் லேசாக ஒரு நட்சத்திரம் போல ஒளிக்கீற்றும் தென்பட தொடங்கியுள்ளதாம். அதாவது சசிகலாவுக்கும் நடிகை விஜயசாந்திக்கும் நல்ல நட்பு உண்டு. சில மாதங்களுக்கு முன்பு சசிகலாவை சந்தித்தார் விஜயசாந்தி. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என சொல்லப்பட்டாலும், தனது தலைமையில் அதிமுக இயங்குவதற்கு பாஜக தலைமை உதவ வேண்டும்; அதற்கு உள்துறை அமைச்சர் அப்பாயிண்ட்மென்ட் வாங்கித் தரவும் என விஜயசாந்தியிடம் கேட்டுக்கொண்டார் சசிகலா.

டெல்லி பதிலால் அப்செட்
இதற்கு தாம் முடிந்த அளவு முயற்சிப்பதாக சொன்ன விஜயசாந்தி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் இது பற்றி பேச அப்போதே முயற்சித்துள்ளார். ஆனால், சசிகலா பேச்சையே எடுக்க வேண்டும் என்பதில் அமித்ஷா தரப்பு உறுதியாக இருக்கிறது என்றே விஜயசாந்திக்கு மெசேஜ் பாஸ் செய்யப்பட்டு வந்ததாம். இதனை சசிகலாவிடமும் விஜயசாந்தி சொல்ல அப் செட்டாகி விட்டாராம். இதன்பின்னர்தான் தற்போதைய ஆன்மீக உலாவை நடத்துகிறாராம் சசிகலா.

சசிகலாவுக்கு குட் நியூஸ்
இந்த நிலையில், கடந்த வாரம், சசிகலாவை திடீரென ஒரு இடத்தில் ரகசியமாக சந்தித்துள்ளார் விஜயசாந்தி. சசிகலா சந்தோசப்படகூடிய சில விசயங்களை அந்த சந்திப்பில் சொல்லி நம்பிக்கைக் கொடுத்துள்ளார் விஜயசாந்தி. ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு சசிகலாவுக்கு ஆதரவான சில சம்பவங்கள் நடக்கும். குறிப்பாக, டெல்லிக்கு முதன்முறையாக செல்லவிருக்கிறார் சசிகலா. அதற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடக்கிறது என பூரிக்கிறது அவரது ஆதரவு வட்டாரங்கள்.
-
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications