6 மாசத்தில்.. 4 முதல்வர்களா?.. "பாஜக படுபிஸி போலயே.. லிஸ்ட் நீளமாகுது".. ப.சிதம்பரம் கிண்டல்..!
: பாஜக குறித்து ப சிதம்பரம் ட்வீட் போட்டு விமர்சித்துள்ளார்
சென்னை: "திறமையற்ற முதல்வர்களை மாற்றுவதில் பாஜக ரொம்பவும் மும்முரமாகவே இருக்கிறது.. அவர்கள் திறமை இல்லாதவர்கள் என்பதை பாஜக தலைமை எப்போது அடையாளம் கண்டுகொண்டது என்றே தெரியவில்லை" என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்வீட் போட்டு விமர்சித்துள்ளார்.
வடமாநிலங்களில் சட்டசபை தேர்தல் வர உள்ளது.. இதற்காக பாஜக மும்முரமாகி வருகிறது.. அதற்கான ஆயத்த பணிகளிலும், களப்பணிகளிலும் இறங்கி உள்ளது.
அதன் ஒருபகுதியாக, முக்கிய பொறுப்புகளில், பதவிகளில் உள்ளவர்களையும் மாற்றம் செய்து வருகிறது.. மற்றொரு பக்கம், சில முதல்வர்கள் தாங்களாகவே தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து வருகிறார்கள்.

குஜராத்
அதன்படி, பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், முதல்வராக இருந்த பாஜகவை சேர்ந்த விஜய் ரூபானி, திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார்... இந்த மாநிலத்தில், இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விஜய் ரூபானி ராஜினாமா செய்திருந்தது பல்வேறு சந்தேகங்களையும், குழப்பங்களையும் அரசியல் களத்தில் எழுப்பி வருகிறது.

எடியூரப்பா
ஏற்கனவே கர்நாடகத்தில் எடியூரப்பா ராஜினாமா செய்திருந்தார்.. இங்கும் தேர்தல் விரைவில் நடக்க உள்ளது.. அதேபோல உத்தரகண்ட் மாநிலத்திலும் தேர்தல் நடக்க உள்ளது.. அங்கு முதல்வராக இருந்த பாஜகவின் திரிவேந்திர சிங் ராவத்தும், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.. ராஜினாமா செய்த இந்த மாநில முதல்வர்கள் மீது அதிருப்திகள் எழுந்ததே காரணம் என்று பரவலாக சொல்லப்பட்டு வருகிறது..

ட்வீட்
ஆனால், உத்தரகண்டில் 4 மாதங்களில் 3 முதல்வா்களை பாஜக மாற்றியது ஏன்தான் என்று இதுவரை புரியவில்லை. இதைதான் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஒரு ட்வீட் போட்டு விமர்சித்துள்ளார்.. வழக்கமாக பாஜகவின் ஒவ்வொரு அசைவையும், விமர்சித்தும் கண்டித்தும் காட்டமாக கேள்வி எழுப்பி வரும் ப.சிதம்பரம், இந்த விஷயத்தையும் அதுபோலவே கேள்வி எழுப்பி உள்ளார்.

பாஜக
"திறமையற்ற முதல்வா்களை மாற்றுவதில் பாஜக ரொம்பவும் மும்முரமாகவே இருக்கிறது.. அவர்கள் திறமை இல்லாதவர்கள் என்பதை பாஜக தலைமை எப்போது அடையாளம் கண்டுகொண்டது என்றே தெரியவில்லை... ஆனாலும், பாஜகவில் உள்ள திறமையற்ற முதல்வர்கள் லிஸ்ட் ரொம்ப நீளமானது.. அடுத்ததாக ஹரியானா, கோவா, திரிபுரா முதல்வா்களும் மாற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications