கூட்டணிக்கு பாஜக ரெடி.. நீங்க ரெடியா.. பொன்.ராதாகிருஷ்ணன் அழைப்பு!
நாடளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட பாஜக தயாராக இருக்கிறது என்று மத்திய பாஜக இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை: நாடளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட பாஜக தயாராக இருக்கிறது என்று மத்திய பாஜக இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சிகள் தயாராகி வருகிறது. பாஜக, காங்கிரஸ், திமுக என்று எல்லா கட்சிகளும் தங்கள் கூட்டணியை உருவாக்குவதற்காக ஆலோசனை செய்து வருகிறது.
தமிழகத்தில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியுடன் பெரிய கூட்டணி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக எந்தக்கட்சியுடன் கூட்டணி வைக்க போகிறது என்று நிறைய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் பாஜக கூட்டணி வைத்து லோக் சபா தேர்தலை சந்திக்க தயாராகி இருக்கிறது. தமிழக கட்சிகளுடன் பாஜக கூட்டணி வைத்து போட்டியிடும். சம உணர்வுள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பாஜக தயாராக இருக்கிறது.
பாஜக மட்டுமில்லாமல் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை, கூட்டணி அமைத்து சந்திக்கும் நிலையிலேயே அனைத்து கட்சிகளும் உள்ளது. அதனால் பாஜகவும் கூட்டணி வைக்க தயாராகவே உள்ளது.
சிவகாசி மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் பெரிய வருத்தம் அளிக்கிறது. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது வேகமாக நடவடிக்கை எடுக்கவேண்டும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications